ரஜினியை எதிர்க்கும் ராகவா லாரன்ஸ் : வெளியான தலைவர் 171 அப்டேட்

Published:

லியோ படத்தின் வெற்றிச் சத்தம் அடங்குவதற்குள் அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கி விட்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தளபதி விஜய்யும் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் நடிக்க தயாராகிவிட்ட நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக சூப்பர் ஸ்டாரை வைத்து தலைவர் 171 இயக்குவது உறுதியாகி விட்டது.

தற்போது தலைவர் 171-ல் நடிகர், நடிகைகள் தேர்வு, கதை உருவாக்கப் பணிகளில் பிஸியாக இருக்கும் லோகேஷ் கனகராஜ் வில்லன் கதாபாத்திரத்திற்கு ராகவா லாரன்ஸை நடிக்க வைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவான சந்திரமுகி இமாலய வெற்றி பெற சந்திரமுகி 2 அண்மையில் வெளியாகியது. ஆனால் படம் தோல்வியைத் தழுவிய நிலையில் ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ராவத் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

அதைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஏற்கனவே அவர் எடுத்த தேசிய விருது பெற்ற திரைப்படமான ஜிகர்தாண்டா படத்தின் அடுத்த பாகமான ஜிகர்தாண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.  தீபாவளி ரிலீஸ்க்கு தயாராக உள்ள இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவும்  மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

EVERGREEN பட வரிசையில் இணைந்த ஜெய்பீம் : X தளத்தில் சூர்யா போட்ட நெகிழ்ச்சி டுவீட்

தற்பாது தலைவர் 171-க்கான அப்டேட் வெளியாகி உள்ளது. அதில் ரஜினிக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஏற்கனவே மல்டி ஸ்டார் படங்களை இயக்கி கலக்கி வரும்  லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, விக்ரம் படத்தில் உலக நாயகனுடன் சூர்யா, பகத் பாசில், விஜய் சேதுபதி மற்றும் லியோவில் அர்ஜுன், சஞ்சய் தத் என சென்று கொண்டிருக்க அந்த லிஸ்ட்டில் தற்போது ராகவா லாரன்ஸ்ம் சேர்ந்துள்ளார்.

தலைவர் 171-க்கான ஷூட்டிங் பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கும் என லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்த நிலையில் தற்போது வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிப்பது அவரது இரசிகர்களிடம் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. ஏற்கனவே ராகவா லாரன்ஸ் காஞ்சனா, முனி-2 போன்ற படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்றதால் சூப்பர் ஸ்டாருடன் மோதே ராகவா லாரன்ஸ் சரியான தேர்வு என்று சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

மேலும் உங்களுக்காக...