வாக்கிங் சென்றபோதே மண்ணை விட்டு மறைந்த அற்புத நடிகர்… அடக்கடவுளே இப்படியும் நடக்குமா?

Published:

நவரச நாயகன் என்றால் கார்த்திக் என்று நமக்குத் தெரியும். நவரச திலகம் என்றால் யார் என இப்போதைய குட்டீஸ்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. அது வேறு யாருமல்ல. நவரச நாயகனின் தந்தை முத்துராமன் தான்.

1960 மற்றும் 70களில் இவர் முன்னணி நடிகர். தமிழ்த்திரை உலகில் இவர் தாய்க்குலங்களால் பெரிதும் கவனிக்கப்பட்ட நட்சத்திரம். அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்தார் என்றால் மிகையில்லை.

அலட்டாமல் அளவான நடிப்பு… வசன உச்சரிப்பு… இவை தான் நடிகர் முத்துராமனின் பிளஸ் பாயிண்டுகள். இவர் வாழ்க்கையில் நடந்த சில சுவையான மற்றும் சோகமான சம்பவங்களைப் பார்க்கலாம்.

வாணி ராணி என்ற படத்தில் நடிகை வாணிஸ்ரீ உடன் நகைச்சுவையாக நடித்து ரசிகர்களை அசர வைத்திருப்பார். ஒரு குணச்சித்திர நடிகரால் எப்படி இப்படி எல்லாம் நடிக்க முடிகிறது என்று வியக்காதவர்களே இல்லை.

எதிர்நீச்சல் படத்தில் இவர் பாலக்காட்டு மலையாளம் பேசி அனைவரது புருவங்களையும் உயரச் செய்திருப்பார். அதே போல நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தைப் பார்த்தால் கல் மனம் படைத்தவர்களும் கண்கலங்கி விடுவார்கள். அதில் புற்றுநோயாளியாக வந்து ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட நடிப்பை வழங்கியிருப்பார். அதிலும் அந்த கதாபாத்திரத்தில் அவ்வளவு யதார்த்தமாக நடித்து அசர வைத்து இருப்பார்.

Sooryaganthi
Sooryaganthi

ஜெயலலிதாவுடன் இவர் நடித்த மறக்க முடியாத படம் சூரியகாந்தி. இந்தப் படம் தான் இவரது திரையுலக பயணத்தில் ஒரு மைல் கல். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம். பட்டி தொட்டி எங்கும் முத்துராமனைக் கொண்டு போய்ச் சேர்த்தது.

நடிகர் முத்துராமனுடன் அதிகப் படங்களில் ஜோடியாக நடித்தவர் கே.ஆர்.விஜயா தான். முத்துராமனைப் பொறுத்தவரையில் ஒரு தனிச்சிறப்பு உண்டு. கடைசி வரை எந்த நடிகைகளிடமும் கெட்ட பெயர் எதுவும் வாங்காமல் ஜென்டில் மேனாக இருந்தவர் இவர் தானாம்.

இவருக்கு கணேஷ், முரளி கார்த்திகேயன் என இரு மகன்கள். இவர்களில் முரளி கார்த்திகேயன் என்பவர் தான் பிற்காலத்தில் நவரச நாயகன் ஆனார்.

முத்துராமன் வாழ்க்கையில் சோகமயமான சம்பவம் இதுதான். ஆயிரம் முத்தங்கள் படத்திற்காக ஊட்டிக்குச் சென்றுள்ளார். அங்கு ஒரு இனிய காலைப்பொழுதில் படப்பிடிப்பு. அங்கு போவதற்கு முன்பாக வாக்கிங் சென்றாராம்.

அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி வந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்து விட்டார். 16.10.1981ல் இந்த மண்ணை விட்டு அவர் மறைந்த போதும் அவரது நினைவுகள் தமிழ்த்திரை உலகம் உள்ளவரை என்றும் அழிவதில்லை.

மேலும் உங்களுக்காக...