கார்த்தி தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான முன்னணி நடிகர் ஆவார். இவரது தந்தை சிவகுமார் மூத்த நடிகர் மற்றும் இவரது சகோதரர் சூர்யாவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் நுழைந்து மணிரத்தினம் இயக்கிய ஆயுத எழுத்து திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் கார்த்தி.
அதைத்தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் கார்த்தி. முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்து அனைவரையும் பாராட்டுகளையும் பெற்று தந்தது. தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, சகுனி மெட்ராஸ், போன்ற ஹிட் படங்களில் நடித்து சாக்லேட் பாயாக வளம் வந்தார் கார்த்தி.
பின்னர் கடைக்குட்டி சிங்கம், கைதி, சுல்தான் போன்ற நல்ல கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தார் கார்த்தி. இது மட்டுமல்லாமல் பொன்னின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பல ரசிகர்களை பெற்றார். தற்போது பிஸியான நடிகராக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார் கார்த்தி.
இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் அவர்களின் தம்பி நாயகனாக அறிமுகம் ஆகும் ஓகோ எந்தன் பேபி திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கார்த்தி பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியது என்னவென்றால், சகோதரர் ஒருவர் இருப்பதே ஸ்பெஷல் தான். நான் சினிமாவிற்குள் வரும்போது என் அண்ணனுடைய சப்போர்ட்டினால் தான் வளர்ந்தேன். அதேபோல் விஷ்ணு விஷால் தனது தம்பிக்கு ஆதரவாக நிற்பது மகிழ்ச்சியை தருகிறது என்று பகிர்ந்து இருக்கிறார் கார்த்தி.