முதல் படம் ரிலீஸ் ஆகல… 2வது படத்தில் ஹீரோயினிடம் வாங்கிய அறை… எம்.எஸ்.பாஸ்கர் கடந்து வந்த பாதை!

By Bala Siva

Published:

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஒரு குணசித்திர நடிகர் என்பது பலருக்கு தெரியும். ஆனால் இவர் ஒரு டப்பிங் கலைஞராக இருந்து ஏராளமான படங்களுக்கு டப்பிங் கொடுத்துள்ளார் என்பது பலருக்கு தெரிந்திராத உண்மை. எம் எஸ் பாஸ்கரின் டப்பிங் திறமையை கொண்டு வந்த படங்கள் தான் மொழி, உப்புக் கருவாடு, உத்தம வில்லன், பாபநாசம், எட்டு தோட்டாக்கள் ஆகிய படங்களை சொல்லலாம்.

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடங்களை ஏற்று வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கு கொடுக்கும் கேரக்டராகவே மாறிவிடுவார் எம்.எஸ். பாஸ்கர். ஆரம்ப கால கட்டத்தில் எம்எஸ் பாஸ்கர் டப்பிங் கலைஞராக இருந்தபோது பல ஹாலிவுட் படங்களின் தமிழ் டப்பிங்கிற்கு இவர் தான் குரல் கொடுத்தார்.

காதலுக்காக உடன்கட்டை ஏறிய பார்த்திபன்.. புரட்சி செய்த சேரனின் முதல் படம்..!

ms baskar1

இந்த நிலையில் தான்  எப்படியாவது ஒரு நடிகன் ஆகி மக்கள் மத்தியில் தனது முகம் தெரிய வேண்டும் என்று ஆசைப்பட்டார். இந்த நிலையில் பசி படத்தை இயக்கிய துரை சமூக அக்கறையுடன் கூடிய ஒரு படத்தை இயக்கினார். புனித மலர்கள் என்ற டைட்டிலில் உருவான அந்த படத்தில் எம்.எஸ். பாஸ்கர் நடித்தார். ஆனால் கடைசி வரை அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை.

தான் நடித்த முதல் படம் ரிலீஸ் ஆகவில்லை என்று  துவண்டு விடாத பாஸ்கர் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் பாலச்சந்தர் தயாரிப்பில் விசு இயக்கத்தில் உருவான திருமதி ஒரு வெகுமதி என்ற படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்தார். இந்த படத்தில் பாண்டியன் கல்லூரி மாணவராக நடிக்க, எம்எஸ் பாஸ்கரும் ஒரு கல்லூரி மாணவராக நடித்தார்.

சினிமாவில் அறிமுகமான கார்த்திக்….. தந்தை முத்துராமன் என்ன செய்தார் தெரியுமா….?

கல்லூரி மாணவிகளை டீசிங் செய்யும் காட்சியில் இவர் நடிக்க  இவருடைய கன்னத்தில் ஹீரோயின் ஜெயஸ்ரீ அறைய வேண்டும் என்பது தான் காட்சி. இந்த காட்சியில் நிஜமாகவே ஹீரோயினிடம் பாஸ்கர் அறை வாங்கியுள்ளார். இதன் பிறகு சின்ன சின்ன காட்சிகளில் நடித்த எம்.எஸ்,பாஸ்கர், மொழி படத்தின் மூலம் தான் ஒரு குணசித்திர நடிகர் என்ற பெயரை பெற்றார். அதன் பிறகு இவருக்கு பல படங்களின் வாய்ப்புகள் கிடைத்தது

ms baskar

குறிப்பாக உத்தம வில்லன் படத்தில் இவருடைய நடிப்பு அபாரமாக இருக்கும். சிவகாசி படத்தில் விஜய்யுடன் வழக்கறிஞராக நடித்திருப்பார். அதே போல் அஜித்துடன் வரலாறு படத்திலும் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த சிவாஜி, மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே, ஜெயம் ரவி நடித்த சந்தோஷ் சுப்பிரமணியன் உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்தார்.

அன்னைக்கு சொன்ன மாதிரியே செஞ்சு காட்டினார் கேப்டன் – தலைவாசல் விஜய் நெகிழ்ச்சி

அதுமட்டுமின்றி எம்.எஸ் பாஸ்கர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற தொடர் தான் இவரது நடிப்பை மக்கள் மத்தியில் அடையாளம் காட்டியது. அதேபோல் கங்கா யமுனா சரஸ்வதி, அலைகள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார். இவர் நடித்த அரசி என்ற சீரியலில் இவர் ஆண்டவர் லிங்கம் என்ற கேரக்டரில் நடித்தார். இன்றும் அவர் பிசியான நடிகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.