உச்சகட்ட கோபத்தில் அபிராமி… மீனாட்சியின் அதிரடி முடிவு… கார்த்திகை தீபம் தொடரின் இன்றைய எபிசோட்…

Published:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடரின் நேற்றைய எபிசோடில் ஆனந்த்-ரியா திருமணத்தை பார்த்துவிட்டு கார்த்திக்கும் தீபாவும் வீட்டிற்கு வருகின்றனர். வீட்டில் மீனாட்சி திருமண நாளைக் கொண்டாடுவதற்காக கேக் எடுத்து வைத்து ஆனந்திற்காக காத்துக்கொண்டிருக்கிறாள்.

ஆனந்தும் வீட்டிற்கு வருகிறான். தான் ரியாவை திருமணம் செய்து கொண்டதை எப்படி வீட்டில் கூறுவது என்று யோசித்து கொண்டிருக்கிறான். அதற்குள் மீனாட்சி ஆனந்தை கேக் வெட்ட வைத்து அனைவர்க்கும் கொடுக்கிறாள். அபிராமி ஆனந்திடம் மீனாட்சிக்கு கிப்ட் வாங்கி வரவில்லையா என்று கேட்கிறாள்.

ஆனந்த் கிபிட் இருக்கு என்று சொல்லி திருமணத்தைப் பற்றி கூற முயற்சிக்கிறான். அப்போது கார்த்திக் வேண்டாம் என்று தடுக்கிறான். ஆனந்த் அவனை தள்ளிவிட்டு காரில் காத்திருந்த ரியாவை வீட்டிற்குள் அழைத்து வருகிறான்.அபிராமி யார் இந்த பொண்ணு என்று கேட்கிறாள்.

ஆனந்த் இது ரியா நங்கள் காலேஜில் ஒன்றாக படித்தோம் லவ் பண்ணினோம். உங்கள் வற்புறுத்தலால் தான் நான் மீனாட்சியை திருமணம் செய்து கொண்டேன் என்று அபிராமியிடம் கூறுகிறான். இதைக் கேட்டதும் மீனாட்சி நொறுங்கி போய் விடுகிறாள்.

அபிராமி உடனே கோபத்தில் ஆனந்தை பளார் பளார் என்று அடித்து விட்டு, உன்னை நம்பி இருக்கிற மீனாட்சிக்கு இப்படி ஒரு துரோகம் பண்ணிட்டியே என்று கேட்கிறாள். எனக்கு வேற வழி இல்லை நான் மீனாட்சியிடம் பேசிக் கொள்கிறேன் என்று கூறுகிறான். மீனாட்சி அதைக் கேட்டதும் உங்களை எவ்வளவு நம்பினேன், இப்படி செஞ்சுட்டிங்களே இனி உங்க கூட வாழறதுல அர்த்தம் இல்லை என்று கூறி தாலியை கழட்டி ஆனந்தின் முகத்தில் வீசி விட்டு வீட்டை விட்டு கிளம்ப தயாராகிறாள். அவளை தீபா தடுக்கிறாள். அதோடு இன்றைய எபிசொட் முடிந்தது. மேலும் காண ஜீ தமிழ் தொலைக்காட்சியை காணத்தவறாதீர்கள்.

மேலும் உங்களுக்காக...