எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர் என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் உலகம் முழுவதும் இந்த படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்தது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் வரும் இடைவேளை காட்சியின் போது ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரும் ஒரு சிறுவனை காப்பாற்றுவதற்காக முயற்சி செய்யும் காட்சி பிரபலமானது. இந்த காட்சியில் அந்தரத்தில் இருவரும் கைகோர்த்து கொண்டது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
ஆனால் இந்த காட்சி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஆபாவாணன் தயாரிப்பில் உருவான இணைந்த கைகள் படத்தின் காட்சியில் இருந்து சுட்டது என்றால் நம்ப முடிகிறதா. ஆம் அந்த படத்தில் நடித்த ராம்கி மற்றும் அருண்பாண்டியன் இரண்டு மலைகளுக்கு இடையே கைகோர்த்துக் கொள்ளும் காட்சியை தான் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப மாற்றி ஆர்.ஆர்.ஆர் எடுத்து உள்ளதாக கூறப்படுவது உண்டு.
தமிழ் திரை உலகை பொருத்தவரை திரைப்பட கல்லூரி மாணவர்கள் என்றால் ஆர்ட் படங்கள் தான் எடுப்பார்கள் என்ற ஒரு நிலை இருந்தது. அதை மாற்றி தங்களாலும் கமர்சியல் படத்தை எடுக்க முடியும் என்று நிரூபித்தவர் ஆபாவாணன். ஊமை விழிகள் தொடங்கி ஒரு சில படங்களை உருவாக்கிய ஆபாவாணன், என்கே விசுவநாதன் இயக்கத்தில் தயாரித்த படம் தான் இணைந்த கைகள்.
நடிகர் அர்ஜுனிடம் சில்க் ஸ்மிதா கேட்ட அந்த ஒரு கேள்வி! கடைசியில் என்ன நடந்தது?
ராம்கி, அருண்பாண்டியன், நிரோஷா, சிந்து உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படத்தின் கதை என்னவெனில் பாகிஸ்தான் நாட்டின் எல்லை என்று தெரியாமல் சென்று விடும் ராணுவ வீரரை மீட்டுக் கொண்டு வருவது தான். அவரிடம் ஒரு ரகசியம் அடங்கி இருப்பதாகவும் அந்த ரகசியத்தை பெற வேண்டும் என்பதற்காக பாகிஸ்தான் சிறைக்கு வில்லன் ஒரு நபரை அனுப்புவார். அவர் தான் ராம்கி.
ஆனால் தனது மகனை மீட்க ராணுவம் மேஜர் ஒருவரை ஸ்ரீவித்யா அனுப்புவார், அவர் தான் அருண்பாண்டியன். இந்த நிலையில் இருவரும் பாகிஸ்தான் சிறையில் உள்ள நபரை மீட்க தனித்தனியாக செல்லும்போது எதிர்பாராத சந்திப்பு மற்றும் இருவரில் யார் வெற்றி பெற்றார்கள் என்பது தான் இந்த படத்தின் கதை. இந்த படத்தில் ராம்கி மற்றும் அருண்பாண்டியன் அபாரமாக நடித்திருப்பார்கள். குறிப்பாக ஆக்சன் காட்சிகள் ஹாலிவுட் பாணியில் எடுக்கப்பட்டிருக்கும்.
இந்த படத்தின் வில்லனாக நாசர் நடித்திருந்தார். இந்த படத்திற்கு கியான் வர்மா என்பவர் இசையமைத்திருந்தார். ஊமை விழிகள் உள்பட ஒரு சில படங்களில் மனோஜ் – கியான் என்ற இரட்டையர்கள் இசையமைத்திருந்த நிலையில் அவர்களிலிருந்து பிரிந்தவர் தான் கியான். இந்த படத்தில் இடம்பெற்ற அந்தி நேர தென்றல் காற்று என்ற பாடல் இன்றளவும் பிரபலம்.
பாரதிராஜா படத்தின் ஹீரோ.. கமல், ரஜினி, குஷ்புடன் நடித்து தொழிலதிபரான நடிகர்..!
இணைந்த கைகள் திரைப்படத்தில் கதை திரைக்கதை பாடல்கள் தயாரிப்பு ஆகிய பொறுப்புகளை ஆபாவாணன் ஏற்றுக்கொண்டார். கியான் வர்மா இந்த படத்தின் பாடல்களை கம்போஸ் செய்திருந்தாலும் ஆபாவாணன் தான் பின்னணி இசை அமைத்தார்.
இந்த படத்தில் இடம்பெற்ற பல காட்சிகள் தமிழ் சினிமா ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது குறிப்பாக இடைவேளை காட்சியின்போது இரண்டு மலைகளின் இரண்டு பக்கத்தில் இருந்து அருண்பாண்டியன் மற்றும் ராம்கி இருவரும் கைகோர்த்துக் கொண்ட காட்சிகள் தியேட்டரில் மிகப்பெரிய அளவில் கைத்தட்டலை பெற்றாது.
ஒகேனக்கல் பகுதியில் இந்த காட்சி படமாக்கப்பட்ட போது ஸ்டண்ட் கலைஞர்கள் மற்றும் மலையேறும் சாகசம் செய்பவர்களின் உதவியோடு படமாக்கப்பட்டது. இந்த காட்சியை தத்ரூபமாக என்கே விசுவநாதன் இயக்கியிருப்பார்.
ரஜினி பட வில்லன் நடிகர் செந்தாமரையின் ரகசிய காதல் கதை! ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அறிய தகவல்கள்!
இந்த படத்தை முதன்முதலாக ஆபாவாணன் ஒரு தமிழ்ப்படத்தை உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய முடிவு செய்தார். உலகின் பல நாடுகளில் இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த காலத்திலேயே இந்த படத்தின் பட்ஜெட் மிகப்பெரிய அளவில் இருந்தாலும் இந்த படம் தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுத்தது.