ஐஸ்வர்யாராய்-க்கு நோட்டீஸ் அனுப்பிய தாசில்தார்.. என்ன காரணம்?

Published:

பிரபல நடிகை ஐஸ்வர்யாராய்-க்கு மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தாசில்தார் ஒருவர் நோட்டீஸ் அனுப்பி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் வசிக்கும் ஐஸ்வர்யா ராய் அம்மாநிலத்தில் உள்ள தங்கோல் என்ற பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி இருப்பதாகவும் அந்த நிலத்திற்கு அவர் வரி கட்டவில்லை என்றும் அந்த பகுதி தாசில்தார் ஐஸ்வர்யா ராய் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஜனவரி ஒன்பதாம் தேதி அவர் இந்த வரியை கட்டியிருக்க வேண்டும் என்றும் ஆனால் அவர் கட்டாததால் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாகவும் அவர் ரூ.21,000 வரியை செலுத்த பத்து நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து இன்னும் இரண்டு நாட்களில் வரியை செலுத்தி விடுவோம் என ஐஸ்வர்யா ராயிடமிருந்து தகவல் வெளிவந்துள்ளதாகவும் அந்த தாசில்தார் தெரிவித்துள்ளார்.

கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ஐஸ்வர்யாராய் வெறும் 21 ஆயிரம் ரூபாய் வரி பணத்தை கட்டாமல் இருந்துள்ளாரா? என நிட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்க இருப்பதாகவும் இதற்காக அவருக்கு ஐந்து கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...