Oscar Awards : 97-வது ஆஸ்கர் விருதுகளுக்கான தேர்வுப் பட்டியலுக்கு இந்தியா முழுவதிலுமிருந்து 28 படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில் 10 இந்திப் படங்களும், 6 தமிழ்ப்படங்களும், 5 மலையாளப்படங்களும், 3 மராத்தி படங்களும் அடங்கும். திரையுலகின் மிக உயரிய விருதாகப் போற்றப்படும் ஆஸ்கர் விருதினை இந்தியா சார்பில் ஏ.ஆர்.ரஹ்மான், ரசூல்பூக்குட்டி, கீரவாணி, சந்திரேபோஸ் பானு அத்தையா, சத்யஜித் ரே, குல்சார், கார்த்திகி கோன்சால்வெசு உள்ளிட்டோர் பெற்றுள்ளனர்.
தற்போது 2024-ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுப் பட்டியலுக்கு இந்தியா சார்பில் அனுப்பப்பட்டுள்ள திரைப்படங்களின் பட்டியலில் இடம்பெற்ற 6 திரைப்படங்கள் எது எது தெரியுமா?
மகாராஜா
நித்திலன் இயக்கத்தில் விஜய்சேதுபதியின் 50-வது வெற்றிப்படமாக அமைந்த மகாராஜா படம் வித்தியாசமான திரைக்கதையில் வெற்றி பெற்றது. பெண் குழந்தை வன்கொடுமையைப் பற்றி இந்தப் படம் அழுத்தமாகச் சொல்லியிருந்தது.
கொட்டுக்காளி
சர்வதேச அளவில் பல விருதுகளை அள்ளிக்குவித்த கூழாங்கல் பட இயக்குநர் விநோத்ராஜின் அடுத்த படைப்புதான் கொட்டுக்காளி. சூரி நடித்த இப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. முற்றிலும் இசையே இல்லாமல் கதைக்கு ஏற்ற சப்தங்களை மட்டும் வெளிவந்த முதல் படம்.
மெய்யழகன் டிரைலர் எப்படி இருக்கு..? கைகொடுக்குமா கார்த்தி – அர்விந்த் சாமி காம்பினேஷன்?
வாழை
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன், நிகிலா விமல், மாஸ்டர் ராகுல் உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது.
தங்கலான்
இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் சீயான் விக்ரம் ஆகியோர் இணைந்து காட்டிய மேஜிக். தங்கம் எடுப்பதற்காக நமது முன்னோர்கள் எப்படி ஆங்கிலேயரிடம் அடிமத்தனமாக இருந்தனர் என்பதை தோலுரித்துக்காட்டியது தங்கலான்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
யானைகளின் வாழ்வியலையும் அதனைக் காக்கும் அவசியம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவாலாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.
ஜமா
புதுமுக இயக்குநர் பாரி இளவழகன் நடித்து, இயக்கிய இப்படம் திருவண்ணாமலை மாவட்டத்தின் கூத்துப்பட்டறை நாடகக் கலைஞர்களின் வாழ்வியலைப் பேசியது. இளையராஜா இந்தப் படத்திற்கு உயிரோட்மான கிராமிய இசையைக் கொடுத்திருந்தார்.
இப்படி நல்ல கதையம்சம் உள்ள வெற்றி பெற்ற இந்த 6 திரைப்படங்கள் தான் தமிழிலிருந்து ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ளது.