தமிழகத்தில் நான்கு மாவட்டங்களை மிச்சங் புயல் புரட்டி எடுத்தது. இதனால் சென்னை மக்கள் வெள்ளத்தில் சிக்கி அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் பலரும் வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களுக்கு உதவி வருகின்றனர்.
ஒருபுறம் பார்த்திபன் அவர்கள் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி வருகிறார். மறுபுறம் சின்னத்திரை கலைஞரான பாலா பாதிக்கப்பட்டவர்கள் 200 பேருக்கு தலை ஆயிரம் என கொடுத்து வருகிறார்.
அதேபோன்று விஜய் டிவி பிரபலம் அறந்தாங்கி நிஷா அவர்களும் குட்டி யானை ஒன்றில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறார். இதனிடையே தளபதி விஜய் அவர்களும் மக்கள் இயக்க நிர்வாகிகள் அரசுடன் சேர்ந்து தன்னார்வலர்களாக செயல்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இவ்வாறு தங்களால் இயன்றவற்றை பலரும் செய்து வருகின்றனர். கடந்த 2015 ஆம் ஆண்டும் சென்னை இதே போன்று வெள்ளத்தில் தத்தளித்தது. அப்போதும் இளைஞர்கள் நடிகர்கள் அரசியல்வாதிகள் என பலர் மக்களுக்கு உதவ முன் வந்தனர்.
நடிகர் மயில்சாமியின் கடைசி ஆசை; ரஜினிகாந்த் கொடுத்த வாக்குறுதி!
அந்த சமயத்தில் மறைந்த காமெடி நடிகர் மயில்சாமி அவர்கள் தரமான ஒரு உதவியை மக்களுக்கு செய்தார். பலரும் மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்டவற்றை வழங்கி வந்தபோது மயில்சாமி அவர்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான இன்சுலினை வழங்கினார்.
சில சர்க்கரை நோயாளிகளுக்கு தினமும் இன்சுலின் போட்டாக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். சிலர் இன்சுலின் போட்டால் தான் சாப்பிட முடியும் என்ற நிலையில் இருப்பார்கள். இதில் வறுமையில் வாடுபவர்கள் தினமும் அரசு மருத்துவமனையில் சென்று இன்சுலின் போட்டு கொள்வார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மயில்சாமி இன்சுலின் வழங்கி உதவினார். இது அப்போது மிகப் பெரிய உதவியாக பார்க்கப்பட்டது. அதோடு இந்த யோசனையை அவருக்கு கூறியது மறைந்த நடிகர் விவேக் அவர்கள் தான் என்றும் கூறப்பட்டது.