11 வயதிலேயே பாடகி… அசத்தல் பாடல்களை அப்பவே தந்தவர் யார் தெரியுமா?

இசையமைப்பாளர் எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில், 1948-ல், திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமாகியாவர் ஜிக்கி.ஞானசெளந்தரி’ என்கிற திரைப்படத்தில், பால ஞானசெளந்தரிக்காக, ‘அருள்தாரும் தேவமாதாவே ஆதியே இன்பஜோதியே’ என்ற பாடலை ஜிக்கி பாடினார். அவர் பாடிய முதல் பாடல்…

jikki

இசையமைப்பாளர் எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில், 1948-ல், திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமாகியாவர் ஜிக்கி.ஞானசெளந்தரி’ என்கிற திரைப்படத்தில், பால ஞானசெளந்தரிக்காக, ‘அருள்தாரும் தேவமாதாவே ஆதியே இன்பஜோதியே’ என்ற பாடலை ஜிக்கி பாடினார். அவர் பாடிய முதல் பாடல் இது. இந்தப் பாடலைப் பாடியபோது அவருக்கு 11 வயது.

இசைமேதை ஜி.ராமநாதன், ஜிக்கியின் குரலைக் கேட்டார். ‘யார் இந்தப் பொண்ணு? கூட்டிட்டு வாங்கப்பா’ என்று ஆள் அனுப்பினார். ஜிக்கியும் வந்தார். ‘ரொம்ப நல்லாப் பாடுறியேம்மா. உன் குரல்ல ஏதோவொரு சக்தி இருக்கு’ என்று சொல்லி, தன் இசையில் பாடவைத்தார். 1950-ம் ஆண்டு, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘மந்திரிகுமாரி’ படத்தில், ஜி.ராமநாதன் இசையில் ஜிக்கியும் திருச்சி லோகநாதனும் பாடினார்கள். திருச்சி லோகநாதன் தான், தமிழ்த் திரையுலகின் முதல் பின்னணிப் பாடகர் எனும் பெருமைக்கு உரியவர்.

‘உலவும் தென்றல் காற்றினிலே…’ என்று ஜிக்கி பாட… படத்தின் க்ளைமாக்ஸில், ‘வாராய் நீ வாராய்… போகுமிடம் வெகுதூரமில்லை… நீ வாராய்’ என்கிற குரலில் இன்னும் பாடலுடன் எல்லோரும் ஐக்கியமானார்கள் .

இந்தப் பாடல்களுக்குப் பிறகு ஜிக்கி பாடாத இசையமைப்பாளர்களே இல்லை. ஐம்பதுகளில் தொடங்கி அறுபதுகள் வரைக்கும் ஜிக்கியின் பாட்டு ராஜாங்கம் பவனி வந்தது. அவரது குரல் ஒலிக்காத ஊர்களே இல்லை. ஜிக்கியின் உச்சரிப்பையும் அதில் கொஞ்சுகிற த்வனியையும் பத்திரிகைகள் பாராட்டின.

1952-ல், திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவனின் இசையில், ’குமாரி’ எனும் படத்தில் ஜிக்கி பாடினார். இந்த முறை அவருடன் பாடியவர் குழையும் குரலுக்கு சொந்தக்காரரான ஏ.எம்.ராஜா. ஜிக்கி குரலின் இனிமையும் ஏ.எம்.ராஜாவின் குரலின் கனிவுத்தன்மையும் அழகுறப் பொருந்தின. அதேபோல் இருவருக்குள்ளும் காதலும் மலர்ந்தது.

’நாடோடி மன்னன்’ படத்தில் ‘மானைத்தேடி மச்சான் வரப்போறான்’ என்ற பாடல் படத்தில் தனியழகுடன் வசீகரித்தது. ’மயக்கும் மாலைப்பொழுதே நீ போ…போ இனிக்கும் இன்ப நிலவே நீ வா…வா’ என்று ஜிக்கி பாட, ’துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்’ என்ற பாடலில், ஜிக்கியின் தாலாட்டுல  இளைப்பாற வைத்தார்.