கண்களை சுற்றி கருவளையமா? கவலை வேண்டாம்.. இந்த 8 டிப்ஸ்களை செய்து பாருங்க.. கருவளையம் இருந்த தடம் இல்லாம மறைந்து போயிடும்…!

கருவளையம்‌ என்பது கண்களை சுற்றி உள்ள பகுதிகள் வறண்டு போய் கருமை நிறத்துடன் காட்சி தருவது ஆகும். கருவளையம் ஏற்படுவது பொதுவாக எல்லாருக்கும் இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை. கருவளையம் வந்த பின்னர் முகத்தின் தோற்றமே மாறி முதுமை அடைந்தது போல தோன்ற வைத்திடும். பெரும்பாலும் ஒப்பனை செய்யும் பொழுது இந்த கருவளையத்தை மறைப்பதற்கே பலர் பெரும்பாடு பட வேண்டியதாய் இருக்கிறது. ஆண் பெண் இருபாலருக்குமே பொதுவாக இருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது கருவளையம் தான்.

dark circles

கருவளையம் எதனால் ஏற்படுகிறது:

  • போதிய அளவு தூக்கம் இல்லாமல் இருப்பது
  • ஏதேனும் அலர்ஜி இருந்தால் வரலாம்
  • உடலில் அதிக அளவு மெலனின் சுரப்பதால் ஏற்படலாம்.
  • கண்களை சுற்றி உள்ள பகுதிகளில் கொழுப்புகள் குறையும் பொழுது கண்களை சுற்றி கருவளையம் ஏற்படலாம்.
  • வெயிலில் அதிகம் அலைந்து திரியும் பொழுது கருவளையம் உண்டாகும் வாய்ப்பு அதிகம்.
  • இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும் பொழுது கருவளையம் ஏற்படலாம்.
  • வயதாகும் பொழுது பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் அதனாலும் கருவளையம் உண்டாகலாம்.
  • பரம்பரையில் யாருக்கேனும் இருந்தால் அது தொடர்ந்து நமக்கும் வர வாய்ப்பு இருக்கிறது.
  • திடீர் என்று உடல் எடை குறையும் பொழுது கருவளையம் உண்டாகும்.
  • அதிக நேரம் மொபைல் அல்லது கணினியில் வேலை செய்பவர்களுக்கும் கருவளையம் ஏற்படலாம்.
  • தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு கருவளையம் உண்டாகும்.
  • போதிய அளவு தண்ணீர் அருந்தாதவர்களுக்கு உடலில் நீர் இழப்பு ஏற்படும் அவர்களுக்கு கருவளையம் நிச்சயம் உண்டாகும்.

dark circle remedy

கருவளையத்தை சரி செய்ய எளிய வீட்டு குறிப்புகள்:

1. உருளைக்கிழங்கு அல்லது வெள்ளரிக்காயை வட்ட வடிவமாக நறுக்கி காலை மாலை இரு வேளைகளும் கண்களில் 10 முதல் 15 நிமிடங்கள் வைத்திருந்தால் கருவளையம் குறையும்.

2. உருளைக்கிழங்கு சாற்றினை கண்களை சுற்றி தடவி வர கருவளையம் காணாமல் போகும்.

3. ஒரு கிரீன் டீ பையினை எடுத்து குளிர்சாதன பெட்டியில் வைத்து அந்த பை நன்கு குளிர்ச்சியான நிலைக்கு வந்தவுடன் கண்களில் வைத்தால் கருவளையம் மறையும்.

4. கற்றாழையின் உள்ளே இருக்கும் ஜெல் போன்ற பகுதியை எடுத்து ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் கண்களை சுற்றி மசாஜ் செய்ய கருவளையம் குறையும். உங்களுக்கு பிசுபிசுப்பாகவோ அல்லது அசவுகரியமாகவோ தோன்றவில்லை என்றால் இந்த கற்றாழை ஜெல்லினை கண்களில் உடனே கழுவி விடாமல் நீண்ட நேரம் கூட வைத்திருக்கலாம்.

5. பாதாம் எண்ணெயை இரண்டு ஸ்பூன் எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறை இரு துளி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதனை கண்களை சுற்றி மசாஜ் செய்து மூன்று நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பின் கண்களை கழுவினால் கருவளையம் குறையலாம்.

6. ஒரு காட்டன் துணியினை ரோஸ் வாட்டரில் ஊற வைத்து தூங்கும் முன்பு பத்து நிமிடங்கள் கண்களின் மேல் வைத்திருந்து அதன் பின் அதனை நீக்கிவிட்டு தூங்கலாம்.

7. தக்காளி சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வர கருவளையம் மறையும்.

8 . தூக்கமின்மை கருவளையத்திற்கான முக்கிய காரணி என்பதால் நன்கு ஆழ்ந்து உறங்கினால் கருவளையம் குறையும். ஏழு முதல் ஒன்பது மணி நேரம் நல்ல ஆழ்ந்த தூக்கத்தை தவறவிடாமல் தூங்கினால் கருவளையத்திற்கு பிரியாவிடை கொடுத்து அனுப்பிவிடலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews