நரை முடியால் தலைகாட்ட முடியலையா? எளிய பொருள்களால் ஆன இயற்கை ஹேர் டை… ரெடி!

40 வயதைத் தாண்டினால் மட்டும் அல்ல. இப்போது இளவயதிலேயே பலருக்கும் நரைமுடி விழுந்து விடுகிறது. இதனால் வெளியே தலைகாட்ட பயப்படுகிறார்கள். இவர்கள் கடைகளில் தேவையில்லாத கெமிக்கல் கலந்த ஹேர் டைகளை உபயோகித்து அலர்ஜிக்கு ஆளாகி,…

hair die

40 வயதைத் தாண்டினால் மட்டும் அல்ல. இப்போது இளவயதிலேயே பலருக்கும் நரைமுடி விழுந்து விடுகிறது. இதனால் வெளியே தலைகாட்ட பயப்படுகிறார்கள். இவர்கள் கடைகளில் தேவையில்லாத கெமிக்கல் கலந்த ஹேர் டைகளை உபயோகித்து அலர்ஜிக்கு ஆளாகி, தலைவலியால் அவதிப்படுகின்றனர். அது மட்டும் அல்லாமல் அதனால் பல தொல்லைகளும் வருகின்றன. இவர்களின் குறைகளைப் போக்க வீட்டிலேயே ஹேர் டை எளிய முறையில் தயாரிக்கலாம். வாங்க பார்ப்போம்.

எப்படி செய்வது?

கொய்யா இலைச்சாறு

நரைமுடி கருப்பாக மாற கொய்யா இலை வைத்து வீட்டிலேயே ஹேர் டை தயாரிக்கலாம்.நரைமுடியை கருமையாக்க பெரும்பாலானோர் ஹேர் டைகளை பயன்படுத்துவர். ஆனால் இந்த ஹேர் டைகளில் உள்ள வேதிப் பொருட்கள் சிலருக்கு ஒத்துக் கொள்ளாது. மேலும் சில நாட்கள் மட்டுமே நீடிக்கும்.
ஆனால் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே நீங்களே ஹேர் டை தயாரித்துக் கொள்ளலாம்.

koyya ilaiஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் 2 கொய்யா இலைகளை நறுக்கி போட வேண்டும். 2 நிமிடம் கொதித்த உடன் அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு டீஸ்பூன் டீதூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். மேலும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதித்த உடன் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைக்க வேண்டும். ஆறிய பின்னர் வடிகட்டியால் வடிகட்டி கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் காபித்தூள், ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 4 டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் 2 டீஸ்பூன் மருதாணி பவுடர் சேர்த்துக் கலக்க வேண்டும். பின்னர் இதனுடன் கொய்யா இலைச் சாறை சிறிது சிறிதாக சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.

இதனை அப்படியே சில மணி நேரங்களுக்கு வைத்து விட வேண்டும்.
7-8 மணி நேரத்திற்கு பிறகு எடுத்துப் பார்த்தால் நன்றாக கருப்பாக இருக்கும்.
அவ்வளவு தான் சூப்பரான ஹோம்மேட் ஹேர் டை ரெடி. அப்படியே எடுத்து நரைமுடி மீது தடவிக்கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து முடியை அலச முடி கருமையாக மாறியிருக்கும்.