முடி கொட்டுதே கவலையா… 30 நாட்களில் இழந்த முடியை வேகமாக வளர இந்த பேஸ்ட் ட்ரை பண்ணுங்க!

Published:

நமது வாழ்வில் பலருக்கும் இருக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை தலைமுடி உதிருதல் என்று சொல்லலாம். இந்த பிரச்சனை இளைஞர்களையும் விட்டு வைக்கவில்லை.

நாம் வாழும் வாழ்க்கை முறை தற்போது முழுவதுமாக மாறிவிட்டது ஷாம்பூக்கள் மற்றும் எண்ணெய்களில் ரசாயனம் கலந்திருப்பது தெரிந்தும் கூட வேறு வழி இல்லாமல் தொடர்ந்து அதனை பயன்படுத்த வேண்டிய சூழலிலும் நிர்பந்தத்திலும் இருக்கிறோம். இதுவே முடி உதிரவோ அல்லது கொட்டவோ காரணமாக அமைகிறது.

இந்தப் பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டும் இல்லை என்றால் காலப்போக்கில் தலை சொட்டையாகி விடவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே இதனை தடுக்கவும் கொட்டிய தலைமுடியை மீண்டும் வேகமாக வளர வைக்கவும் ஒரு அற்புதமான வழி இருக்கிறது.

வெறும் 30 நாட்களில் இழந்த முடியை திரும்ப பெறுவதற்கு வெந்தைய பேஸ்ட் மிகவும் உதவியாக இருக்கிறது.

இதனை தயார்படுத்துவதற்கு தயிரும் கற்றாழையும் தேவைப்படுகிறது. உங்களது முடிவின் அளவிற்கு ஏற்ப வெந்தயத்தை எடுத்து 24 மணி நேரத்துக்கு நீரில் ஊற வைக்க வேண்டும் பின்னர் நன்கு ஒரு பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளலாம். அதில் ஒரு கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் தயிர் ஒரு கரண்டி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்த கலவையாக மாற்ற வேண்டும்.

பெண்கள் அழகிற்காக இப்படிலாம் பண்ணுகிறார்களா? பல நாட்டு பெண்களின் அழகு ரகசியம் இதோ!

தலையில் குளிப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் செக்கு எண்ணையை வைத்து நன்கு தலைமுடியை காய விட வேண்டும். பின்னர் குளிக்கும் போது இந்த கலவையை பூசி நன்கு தலைமுடியை அலச வேண்டும். இவ்வாறு மாதத்திற்கு மூன்று தடவைகள் செய்தால் தலைமுடி வேகமாக வளர ஆரம்பிக்கும் என்று சொல்லப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...