பெண்கள் அழகிற்காக இப்படிலாம் பண்ணுகிறார்களா? பல நாட்டு பெண்களின் அழகு ரகசியம் இதோ!

பொதுவாக அழகு என்பது அவரவர் பார்வையில் விருப்பத்திற்கு ஏற்ப மாறுபட்டது. இந்த அழகிற்காக பலர் செய்யும் விஷயங்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

மேற்கத்திய நாடுகளில் அழகு என்று சொல்ளுக்கு சில வரையறைகள் சொல்லப்படுகின்றன. திருந்திய புருவம் பளிச்சிடும் சருமம், ஷார்ட் ஹேர் இன்னும் பல. முக அழகு என்று சொல்லும்போது சிரிப்புக்கு என்று தனி இடம் இருக்கும். அதற்கு முக்கிய காரணமாக இருப்பது பற்கள். அந்த வகையில் பற்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் ஜப்பானியர்கள்.

நாம் சிங்கப்பல் என்று சொல்லும் தெத்துப்பல்லுக்கு ஜப்பானியர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்களாம் .இதில் ஆச்சரியம் என்னவென்றால் சீரான பற்களை கொண்ட மக்கள் கூட இந்த ட்ரெண்டிங்கிற்கு மாறி வருகின்றனர் என்பதுதான்.

இந்த பட்டியலில் கண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் நெதர்லாந்து மக்கள். இவர்களில் பெரும்பாலானோர் கண்களில் பிளாட்டினம் மின்னுவதை நாம் காணலாம். என்னது கண்களில் பிளாட்டினமா என தோன்றலாம்,இதற்கு அவர்கள் சொல்லும் பதில் எஸ்ட்ராக்குலர் இம்பக்ட். ஒருவது கருவிழிகளில் செயற்கையாக அவர் விரும்பும் வடிவங்களை கண்ணுக்குள் பொருத்தி கொள்ளலாம். நெதர்லாந்தைத் தவிர மற்ற நாடுகளில் இது பரவலாக இல்லை. என்னதான் அழகு என்றாலும் கண்ணு முக்கியம் என்பதை நெதர்லாந்து மக்கள் சிறிது சிந்திக்கலாம்.

அடுத்ததாக பர்மாவிலுள்ள பர்மிய பெண்கள். இவர்களை நாம் சற்று நிமிர்ந்து தான் பார்க்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் கழுத்துப்பகுதி நீண்டிருக்கும். இதற்காக அவர்கள் செயற்கையான வளையத்தை அணிகலன்களாக அணிவதன் மூலம் இந்த நீள் கழுத்தை பெறுகின்றனர். இதை பர்மிய பெண்கள் அதிகம் விரும்புவதாக சொல்லப்படுகிறது.

அழகில் நிறம் என்பதும் சிலரின் பார்வையில் முக்கியத்துவம் பெறுகிறது. சிலர் வெள்ளையாக வேண்டும் என்று பல்வேறு சரும கிரீம்களை உபயோகிக்கின்றன. ஆப்பிரிக்காவில் உள்ள மக்கள் விரும்புவது செங்கல் சிவப்பு நிறம். இதற்காக அவர்கள் அதிக அளவு பணம் செலவு செய்ய விருப்பம் வில்லை.

களிமண் மற்றும் எண்ணெய் பயன்படுத்தி ஒரு பேக் தயார் செய்து அதையே சருமத்திற்கு உபயோகப்படுத்துகிறார்கள்.

காரை வைத்தே கின்னஸ் சாதனை – கோவை தொழிலதிபர்

கூந்தலுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் மத்தியில் இங்குள்ள சில பெண்கள் மொட்டை அடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றன. முடிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பவர் மத்தியில் கூந்தல் இல்லாததுதான் தங்களின் அழகு என்று கெத்தாக சுற்றுகின்றனர் இந்த ஆப்பிரிக்க பெண்கள் .

தோற்ற அழகிற்காக பல விஷயங்களை செய்கின்றனர். எதுவாக இருந்தாலும் இயற்கைக்கும் மாறாக நாம் செய்யும் எதுவாக இருந்தாலும் அதற்கான எதிர்வணையாற்றும் என்பதை நாம் நினைவில் வைத்து செயல்படுவதே சாலச் சிறந்தது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews