தலைமுடியினை ஷைனிங்காக மாற்றப் பலரும் தேர்ந்தெடுக்கும் ஆப்ஷன் பார்லர்தான். ஆனால் இப்போது நாம் செலவே ஆகாமல் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு தலைமுடியினை ஷைனிங்க் ஆக்குவது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
வாழைப்பழம்-1
முட்டையின் வெள்ளைக் கரு- 1
தயிர்- கால் கப்
செய்முறை:
1. வாழைப்பழத்தினை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. அடுத்து இதனுடன் முட்டையின் வெள்ளைக் கருவினைச் சேர்த்து மிக்சியில் போட்டு அரைக்கவும்.
3. இதனை பிரிட்ஜில் வைத்து எடுத்து தயிருடன் கலந்து தலைமுடியில் தடவி முடியை அலசினால் தலைமுடி ஷைனிங்காக இருக்கும்.