சமையல்

ஆரோக்கியமான வாழைப்பழ டீ!

1177bc847ce015d819c72985a3a865fd-2

வாழைப் பழம் மிகப் பெரிய அளவில் செரிமான சக்தியினை மேம்படுத்துவதாக உள்ளது, இதனை தினசரி எடுத்துக் கொண்டால் செரிமானப் பிரச்சினைகள் சரியாகும். இப்போது வாழைப்பழத்தில் டீ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
வாழைப்பழம் – 1
லவங்கப்பட்டை – 1 துண்டு
டீ தூள் – 1 டீஸ்பூன்
தேன் – 1 டீஸ்பூன்

செய்முறை
1. வாழைப் பழத்தினை தோல் உரித்து, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. அடுத்து வாழைப் பழத்துடன் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
3. அடுத்து இதனை வேகவிட்டு லவங்கப்பட்டை, டீ தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி தேன் சேர்த்தால் வாழைப்பழ டீ ரெடி.
 

Avatar photo
Staff