விருச்சிக ராசி அன்பர்களே! அக்டோபர் மாதத்தினைப் பொறுத்தவரை ராசி நாதன் செவ்வாய் பகவான் கேதுவுடன் இணைந்து 12 ஆம் இடத்தில் உள்ளார். சுக்கிர பகவான் 10 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளார். சுப விரயச் செலவுகளைச் செய்வதற்கு ஏற்ற மாதமாக அக்டோபர் மாதம் இருக்கும்.
பல நாட்களாக இருந்துவரும் உடல் தொந்தரவுகளுக்கு உயர் மருத்துவ சிகிச்சை, குடும்பத்துடன் சுற்றுலா என்பது போன்ற செலவுகளைச் செய்வீர்கள். வாங்கிய பழைய கடன்களை அடைப்பீர்கள். பல ஆண்டுகளாக விற்க முடியாமல் நிலுவையில் இருந்துவந்த மனை சார்ந்த விஷயங்கள் முடிவுக்கு வரும்.
சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!
சொத்துரீதியாக உடன் பிறப்புகளுடன் இருந்துவந்த பிரச்சினைகள் குறித்து தற்போதைக்குப் பேசாமல் காலம் தாழ்த்தவும்; பேசும்போது நிதானித்துப் பேசவும்.
அக்டோபர் இரண்டாம் பாதியில் சூர்ய பகவான்- புதன் பகவான் கூட்டாக இணைந்து 11 ஆம் இடத்தில் இருந்து 12 ஆம் இடத்திற்கு இடப் பெயர்ச்சி செய்கின்றனர்.
உணர்வுரீதியாக சற்று தளர்ந்து காணப்படுவீர்கள். எதையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள். சுக்கிர பகவான் பார்வையால் குடும்ப வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும்.
உணவு, உடை என அத்தியாவசியத் தேவைகளை நிறைவாக பூர்த்தி செய்வீர்கள். பொருளாதாரரீதியாக எடுத்துக் கொண்டால் பண வரவு இருக்கும் அளவு செலவு மற்றொருபுறம் இருக்கவே செய்யும்.
முடிந்தளவு செலவுகளை ஆதாயங்களை மாற்றிவிடுங்கள். சுக்கிர பகவானின் ஆசியால் வீடு, மனை சார்ந்த விஷயங்களில் புதிதாக முதலீடுகளைச் செய்ய ஆர்வம் காட்டுவீர்கள்.
தொழில்ரீதியாக அபிவிருத்தி செய்யவோ அல்லது புதுத் தொழில் துவங்கவோ அரசின் மானியங்கள்/ கடன் உதவிகள் கிடைக்கப் பெறும். மேலும் மாணவர்கள் கல்வியில் மிகவும் ஆர்வத்துடன் படிப்பர். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்த பலருக்கும் ரிசல்ட் பாசிட்டிவாக இருக்கும்.
உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!
வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை வெளிநாடு வேலை செய்ய முயற்சி செய்தவர்களுக்கு நற் செய்தி கிடைக்கப் பெறும். அரசு வேலைக்குக் காத்திருப்போருக்கு எதிர்பார்த்த வேலையானது கிடைக்கப் பெறும். மாதம் முழுமையும் தடைகள் வந்தாலும், நீங்கள் அதனை தைரியத்துடன் எதிர்கொள்வீர்கள்.