விருச்சிகம் மே மாத ராசி பலன் 2023!

Published:

விருச்சிக ராசியினைப் பொறுத்தவரை மே மாதத்தில் குரு- ராகு-சூர்யன்- புதன் என நான்கு கிரகங்களும் 6 ஆம் இடத்தில் உள்ளது. சனி பகவான் 4 ஆம் இடத்தில் உள்ளார்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை பெரிய அளவிலான மாற்றங்களை எதிர்பார்க்காதீர்கள், பெரிய மாற்றங்களுக்கு முயற்சிக்காமல் இருக்கும் வேலையினைத் தக்கவைத்துக் கொள்ளுதல் நல்லது.

தொழில்ரீதியாகவும் போராட்டங்களும், தடுமாற்றங்களும் நிறைந்த காலகட்டமாக இது இருக்கும். தொழில்ரீதியாக அபிவிருத்தி மற்றும் புதுத் தொழில் துவங்கும் முயற்சிகளைத் தள்ளிப் போடுதல் நல்லது.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை கைகூடிய வரன்களும் தள்ளிப் போகும். காதலர்கள் மத்தியில் அவநம்பிக்கை ஏற்படும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையேயான உறவில் மன வெறுமை ஏற்படும்; சிலர் பிரியும் சூழலுக்குத் தள்ளப்படுவர்.

இதையும் படியுங்கள்: சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் சிறு சிறு உடல் தொந்தரவுகள் ஏற்படும். மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருக்க எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

மாணவர்களைப் பொறுத்தவரை ஆசைகள், கனவுகள் அதிகமாக இருந்தாலும் ஆதரவு குறைவாக இருக்கும். இதனால் நீங்கள் கடும் போராட்டத்தினைச் சந்திப்பீர்கள்.

இதையும் படியுங்கள்: உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காமல் கஷ்டப்படுவீர்கள்.

மேலும் உங்களுக்காக...