ஆடி மாதத்தினைப் பொறுத்தவரை சூர்யன் சிம்ம ராசிக்குப் பெயர்கிறார்; சுக்கிரன் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்; புதன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
விருச்சிக ராசி அன்பர்களே! இந்த மாதம் வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் முன்னேற்றத்தினைக் கொடுக்கும் மாதமாக உள்ளது. தசம ஸ்தானத்தில் சுக்கிரன்- செவ்வாய் இணைந்து சனி பகவான் மற்றும் குரு பகவானின் பார்வையில் உள்ளனர்.
சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!
ஆறாம் இடத்தில் இருக்கும் குரு பகவானால் பண வரவு ஏற்படும். தொழில்ரீதியாக செய்யும் அபிவிருத்தி சார்ந்த முடிவுகளில் வெற்றி பெறுவீர்கள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகரீதியாக பதவி உயர்வு, சம்பள உயர்வு என நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் ஈடேறும்.
வீடு, மனை வாங்கும் முயற்சிகளுக்காக அட்வான்ஸ் தொகை கொடுப்பீர்கள். செல்வாக்கு அதிகரிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இல்லத்தரசிகளுக்கு குடும்பத்தின் ஆதரவு கிடைப்பதுடன் மன மகிழ்ச்சியுடன் இருப்பர்.
திருமண காரியங்களைப் பொறுத்தவரை எதிர்பார்த்த வரன் அமையப் பெறும். குழந்தைகளின் உயர் கல்வி ரீதியான விஷயங்களில் செலவுகள் ஏற்படும்; ஆனால் எதிர்பார்த்த கடன் உதவிகள் உடனடியாகக் கிடைக்கப் பெறும்.
உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!
உங்களுடைய வியாபாரரீதியாக பெரிய அளவில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர்; லாபமும் இரட்டிப்பாகும். வாங்கிய பழைய கடனை அடைப்பீர்கள். தொழில்ரீதியாக வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.