துலாம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2023!

Published:

துலாம் ராசி அன்பர்களே! ஆகஸ்ட் மாதத்தினைப் பொறுத்தவரை வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை வளர்ச்சி நிறைந்த மாதமாக இருக்கும். புது வேலைக்கு முயற்சிப்போருக்கு உங்களின் திறமேக்கேற்ற கனவு வேலை கிடைக்கப் பெறும். சம்பள உயர்வு, பதவி உயர்வு தள்ளிப் போகும்.

பொருளாதாரரீதியாக எடுத்துக் கொண்டால் நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செலவினங்கள் அதிகமாக இருந்தாலும் அனைத்தும் ஆதாயச் செலவுகளாகவே இருக்கும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

வீடு, மனை வாங்க அட்வான்ஸ் கொடுப்பீர்கள். வண்டி, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களால் குடும்பத்தில் பெரும் பிரச்சினைகள் ஏற்படும். பூர்விகச் சொத்துகள் ரீதியாக இருந்த பிரச்சினைகளில் இழுபறி நீடிக்கும்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே பிரச்சினைகள் ஏற்படும்; ஆனால் அவை பெரிதளவில் வெடிக்காமல் இருக்க நிதானித்துப் பேசுதல் அவசியம்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை இதுவரை வரன்கள் தள்ளிப் போன நிலையில் தற்போது எதிர்பார்த்த வரன் கைகூடும். மாணவர்களைப் பொறுத்தவரை உயர்கல்விரீதியான உங்களின் திட்டங்களை மிகச் சிறப்பாகச் செயல்படுத்துவீர்கள்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை தன்னம்பிக்கை அதிகரித்துள்ளதாக உணர்வீர்கள். உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை எந்தவொரு பிரச்சினையும் இல்லை. நண்பர்களுடன் சிறு சிறு மனக் கசப்புகள் ஏற்படும்.

சுக்கிர பகவானின் இடஅமைவால் தேவையில்லாத சிந்தனைகளால் மன உளைச்சல்கள் ஏற்படும்.

மேலும் உங்களுக்காக...