துலாம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது சிறப்பு..!!

By Aadhi Devan

Published:

Thulam Krodhi 2024: ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று குரோதி வருடம் ஆரம்பம் ஆகிறது. இந்த வருடம் கடகம் ராசி அன்பர்களுக்கு எத்தகைய பலன்களை கொடுக்க இருக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் செவ்வாயும் சனியும் இணைந்து கும்ப ராசியில் அமர்கிறார்கள். எதிரும் புதிருமாக இருக்கும் இருவர் இணைந்து ஒரே இடத்தில் அமர்வதால் இந்த வருடம் சிக்கலான வருடமாக தான் பார்க்கப்படுகிறது

மற்றவர்களை எளிதில் எடை போடுபவர்களாக இருக்கும் துலாம் ராசியினருக்கு இந்த குரோதி வருடம் சில பகைகளை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. ராசி அதிபதியான சுக்கிரன் இந்த வருட தொடக்கத்திலேயே உச்சத்தில் இருக்கிறார். அதனால் யாரையும் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டாம்.

ஒருவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அடுத்தவர்களை தீர்மானிக்க வேண்டாம். இரண்டாம் இடத்திற்கு அதிபதியான செவ்வாய் ஐந்தாம் இடத்தில் சனியுடன் சேர்ந்து அமர்கிறார். இதனால் பூர்வீக சொத்துக்களில் பிரச்சனை ஏற்படும்.

அதேபோன்று சனியும் செவ்வாயும் சேர்ந்து சண்டை சச்சரவுகளை ஏற்படுத்துவார்கள். ஆகவே பெண்கள் கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். ஐந்தாம் இடத்திற்கு அதிபதியான சனீஸ்வரன் அவருடைய இடத்திலேயே அமர்ந்திருக்கிறார்.

இதனால் வரவேண்டிய சொத்துக்கள் வில்லங்கமின்றி கைக்கு வந்து சேரும். ஆனால் தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்து பொறுமையாக இருக்க வேண்டும். ஏழாம் இடத்தில் இருக்கும் குரு உங்களுக்கு நல்ல பலன்களையே கொடுத்து வருவார். ஆனால் குரோதி வருடம் பிறந்த 15 நாட்களில் குரு பெயர்ச்சி நடைபெற இருக்கிறது.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

இதனால் அஷ்டமகுருவாக மாறும் குரு பகவான் சில சிக்கல்களை கொடுக்கத் தொடங்குவார். எனவே கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். துலாம் ராசியினர் பணியிடங்களில் யாரிடமும் மரியாதை குறைவாக பேச வேண்டாம்.

துலாம் ராசிக்கும் சூரியனுக்கும் பொருந்தாது என்று கூறலாம். இதில் வருடத்தின் தொடக்கத்தில் சூரியன் உச்சத்தில் இருக்கிறார் அதனால் துலாம் ராசியினரும் அதீத கோபம் உடையவர்களாக இருப்பார்கள். கேது பன்னிரண்டாம் இடத்தில் இருப்பார்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

அதனால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் பத்தாமிடத்திற்கு அதிபதியான சந்திரன் ஒன்பதாம் இடத்தில் சென்று அமர்கிறார். எனவே இந்த குரோதி வருடத்தில் பெண் தெய்வ வழிபாடு கூடுதல் பலன்களை கொடுக்கும்.