சிம்ம ராசி அன்பர்களே சனி பெயர்ச்சியினைப் பொறுத்தரை சனி பகவான் 7 ஆம் இடத்தில் இட அமர்வு செய்கின்றார். சனி பகவானின் பார்வை நேராக இருப்பதால் கோபம் கொள்ளுதல், மன அழுத்தத்திற்கு ஆளாகுதல் என்பது போன்ற விஷயங்களைச் செய்யாதீர்கள்.
நீங்கள் செய்ய நினைக்கும் மாற்றங்களை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து, முன் அனுபவம் வாய்ந்தவர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவுகளை எடுங்கள்.
மற்ற கிரகங்கள் உங்களுக்குச் சாதகமானதாகவே உள்ளது. வார்த்தைகள் விஷயத்தில் கவனம் தேவை. வாக்குஸ்தானம் வலுவாக இருந்தாலும் வாக்குக் கொடுக்கும் போது கவனமாக வாக்குக் கொடுக்கவும்.
தொழில், வேலை, இடம் என நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் ஏற்படும். குடும்ப வாழ்க்கை என்று பார்க்கையில் தேவையற்ற பேச்சுகள், வாக்குவாதங்கள் உங்களின் நிம்மதியினைத் தொலைத்துவிடும்.
மேலும் வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை. உடல் நலன் என்று பார்க்கையில் முதுகு வலி, கழுத்துவலி போன்ற பிரச்சினைகள் அதிகமாகவே இருக்கும்.
சோர்ந்து சோர்ந்து படுத்துக் கொள்வீர்கள். மருத்துவரின் ஆலோசனையினை எடுத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தினைவிட்டு பிரிந்து வெளியூர் வேலைக்குச் செல்வீர்கள். தானாகவே நடக்கும் மாற்றத்தினை நீங்கள் அப்படியே ஏற்றுக் கொள்வது நல்லது.
கூட்டுத் தொழிலில் பிரச்சினைகள் ஏற்படும்; பங்குதாரர்களுடன் பணரீதியாக கருத்து வேறுபாடுகள் ஏற்படும்; ஆனால் அதனை கண்டும் காணாமல் விட்டுவிடுங்கள்.
கடல் கடந்து உத்தியோக ரீதியாகப் பயணம் செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். திருவாரூரை அடுத்துள்ள திருக்கொள்ளிக் காடு கோவிலுக்குச் சென்று பூஜை செய்து வாருங்கள்.
ஏழாம் இடத்துச் சனி பகவான் சுப காரியங்களைக் கெடுக்கமாட்டார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வேற்று மொழி இனத்தவர்களால் லாபம் கிடைக்கும். புதிய உறவுகள், புதிய இடங்கள், புதிய பயணங்கள் என உங்கள் வாழ்க்கை மாறும்.