சிம்மம் நவம்பர் மாத ராசி பலன் 2022!

Published:

சிம்ம இராசியினைப் பொறுத்தவரை இந்த மாதம் சாதகமான மாதமாக இருக்கும். 10 ஆம் இடத்தில் செவ்வாய், 6 ஆம் இடத்தில் சனி பகவான், குரு பகவான் 8 ஆம் இடத்தில், 4 ஆம் இடத்தில் சூர்யன், புதன், சுக்கிரன் என கோள்களின் இட அமைவு உள்ளது.

வேலைவாய்ப்புரீதியாக எடுக்கும் முயற்சிகள் தொட்டது துலங்கும் மாதமாக இருக்கும். உயர் பதவி கிடைக்கும். வேலைப் பளு குறையும். தொழில்ரீதியாக வராத பழைய கடன்கள் வந்து சேரும், பணவரவு சிறப்பாக இருக்கும்,

சொத்துகள் வாங்குவதற்கு அட்வான்ஸ் கொடுப்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்ததைப்போல் ஒரு கனவு இல்லத்தை வாங்குவீர்கள். பூர்விகச் சொத்துகளில் இருந்த இழுபறிகள் சரியாகும், காதலர்கள் காதலை குடும்பத்தில் காதல் குறித்துச் சொல்லலாம், தடைகள் இருந்தாலும் இறுதியில் உங்கள் முடிவுக்கு இசைவார்கள்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை தட்டிப் போன வாய்ப்புகளும் கைகூடும். வீடுகளில் ஏதாவது புதுப்பிப்பு வேலை செய்வீர்கள். வாகனத்தினை மாற்ற நினைப்போர் நிச்சயம் மாற்றுவீர்கள்.

சுப செலவுகள் குடும்பத்தில் ஏற்பட்டு மன மகிழ்ச்சியினைக் கொடுக்கும். மாணவர்கள் உயர் கல்விரீதியாக எடுக்கும் முடிவுகள் சிறப்பானதாக இருக்கும். தேர்வில் மாணவர்கள் சிறப்பான மதிப்பெண் எடுப்பார்கள். குழந்தைகள்ரீதியாக பெற்றோர் மன நிறைவு அடைவார்கள்.

ஆரோக்கியத்தில் இருந்த தொய்வுகள் சரியாகும். பணம் கொடுக்கல், வாங்கலில் மட்டும் கவனம் தேவை.

மேலும் உங்களுக்காக...

Leave a Comment