கன்னி நவம்பர் மாத ராசி பலன் 2022!

Published:

சுக்கிரன், சூர்யன், புதன் இணைந்து 3 ஆம் இடத்தில், 10 ஆம் இடத்தில் செவ்வாய், 5 ஆம் இடத்தில் சனி பகவான் என்ற நிலையில் கோள்களின் இட அமைவு உள்ளது.

நவம்பர் முதல் பாதி சாதகமான பலனைக் கொடுக்காது, இரண்டாம் பாதியினைப் பொறுத்தவரை செவ்வாய் 10 ஆம் இடத்தில் இருந்து 9 ஆம் இடத்திற்கு நகர்கிறார்.

செவ்வாயின் நகர்வு வேலைவாய்ப்புரீதியாக நற்பலனைக் கொடுக்கும், பளுச்சுமை குறையும். புது வேலைக்கு முயற்சிப்போர் தயங்காமல் முயற்சிக்கலாம். மனக் குழப்பம் குறைந்து தைரியத்துடன் செயல்படுவீர்கள், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டுக்காரர்களால் உதவிகள் கிடைக்கப் பெறும்.

உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று வருவீர்கள். செவ்வாயின் இடப் பெயர்வு தொல்லைகள், தொய்வுகளைக் குறைக்கும். ராகு, கேது தடங்கல்களை ஏற்படுத்தினாலும் முடிவு சிறப்பானதாகவே இருக்கும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை எதிர்பார்த்த வரன் கிட்டும். மாணவர்களைப் பொறுத்தவரை உயர்கல்வி தேர்ந்தெடுப்பது ரீதியாக குழப்பங்கள் இருந்தாலும் எடுக்கும் முடிவுகள் சிறப்பானதாகவே அமையும்.

உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை முந்தைய மாதங்களைவிட சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

மேலும் உங்களுக்காக...

Leave a Comment