சிம்மம் மாசி மாத ராசி பலன் 2023!

Published:

7 ஆம் இடத்தில் சூர்ய பகவானும் குரு பகவானும் இணைந்து இட அமர்வு செய்துள்ளனர். புதன்- குரு- சுக்கிரன் சேர்க்கை மாசி மாத பிற்பாதியில் நடைபெறும். மாதத்தின் முற் பகுதி சிறப்பாக இருக்கும், பிற்பாதியில் எந்தவொரு புது முயற்சியினையும் செய்யும்போது ஒருமுறைக்குப் பலமுறை யோசிக்கவும்.

செலவுகள் செய்யும்போது யோசித்துச் செய்யுங்கள், இல்லையேல் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். கணவன்- மனைவியைப் பொறுத்தவரை மன ரீதியான நெருக்கம் குறைந்து காணப்படும். குடும்பத்தில் முன்னுக்குப் பின்னான விஷயங்கள் நடைபெறும்.

குழந்தைகளுக்காக நேரம் செலவிடுவீர்கள். தந்தையுடனான உறவில் நெருக்கம் ஏற்படும். குடும்பத்தில் தாய் வழியிலான உறவுகளுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படும்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை நினைத்தது நடந்தேறுவது போன்ற சூழல்கள் பலவும் ஏற்படும். வண்டி, வாகனங்களில் செல்லும்போது ஜாக்கிரதையாகச் செல்லவும். புதிதாக வண்டி, வாகனங்கள் எதையும் வாங்காமல் தள்ளிப் போடுங்கள்.

திருமண காரியங்கள் அல்லது வரன் தேடுதல் போன்ற விஷயங்களை மாதத்தின் முதல் பாதியில் செய்யத் துவங்குங்கள். உடல் ஆரோக்கியக் குறைபாடுகள் சரியாகி உடல் ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

மேலும் உங்களுக்காக...