கன்னி மாசி மாத ராசி பலன் 2023!

By Gayathri A

Published:

சுக்கிரன் அஸ்தமனம் நடைபெற உள்ளதால் திருமண காரியங்களை இப்போதைக்கு நீங்களே தள்ளிப் போடுங்கள்; இல்லையேல் விறுவிறுவென நடைபெற்ற திருமண காரியங்கள் கடைசி நேரத்தில் நின்று போக வாய்ப்புண்டு.

அதேபோல் புதுமனைப் புகுவிழா போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கான தேதியினை அடுத்த மாதத்தில் குறியுங்கள். 9 ஆம் இடத்தில் செவ்வாய் பகவான், 8 ஆம் இடத்தில் ராகு பகவான் உள்ளனர்.

மாணவர்களைப் பொறுத்தவரை கல்விரீதியாக பின் தங்கி இருந்த நீங்கள், தற்போது படிப்பில் மேம்பட்டுக் காணப்படுவீர்கள். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை புது வேலைக்கு முயற்சிக்காமல் இருக்கும் வேலையினைத் தக்கவைத்துக் கொள்வது சிறப்பு.

மேல் அதிகாரிகள், சக பணியாளர்களுடன் வாக்குவாதம் செய்யாமல் இருத்தல் நல்லது. இடமாற்றம், சம்பள உயர்வு கிடைக்கப் பெறும். தொழில் ரீதியாக அபிவிருத்தி செய்யும்போது ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செயல்படுவது நல்லது.

உடல் ஆரோக்கியம் ரீதியாக சிறு சிறு தொந்தரவுகள் இருக்கும், தாய் வழி ரீதியான உறவினர்களால் உதவிகள் கிடைக்கப் பெறும். தாய் – தந்தையுடன் அனுசரணையுடன் நடந்து கொள்வீர்கள்.

உடன் பிறப்புகளுடன் பிரச்சினைகள் ஏற்படும். கணவன்- மனைவியைப் பொறுத்தவரை வீண் பேச்சுகள்/வாக்குவாதங்களால் பிரிய வாய்ப்புண்டு. குழந்தை பாக்கியத்துக்கு எதிர்பார்த்து இருப்போருக்கு நற்செய்தி கிடைக்கப் பெறும்.

மேலும் உங்களுக்காக...