சிம்மம் சித்திரை மாத ராசி பலன் 2023!

Published:

சிம்ம ராசியினைப் பொறுத்தவரை குரு பகவான் 9 ஆம் இடத்திற்குப் பெயர்ச்சி ஆகிறார். கடுமையான முயற்சிகள் செய்தால் மட்டுமே இந்த காலகட்டம் சிறப்பானதாக இருக்கும். உடல் ஆரோக்கியம்ரீதியாக பெரிய அளவில் பாதிப்புகள் இருக்கும்.

உடலின் வலது புறப் பகுதியில் சிறிய அளவில் தொந்தரவுகள் ஏற்பட்டாலும், உடனடியாக மருத்துவரை அணுகுதல் வேண்டும்; இல்லையேல் பெரிய அளவிலான மருத்துவத் தொந்தரவுகள் ஏற்படும்.

உடல்நலக் குறைவு தொடர்பாக விரயச் செலவுகள் ஏற்படும்; வண்டி, வாகனங்களில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை. முடிந்தளவு இரவு நேரப் பயணத்தைத் தவிர்க்கவும்.

செவ்வாய் விரய ஸ்தானத்தில் மறைந்து நீச்சம் அடைவதால் திடீர் ராஜயோகம் அடிக்கும். சுக்கிரன் லாப ஸ்தானத்துக்கு வருவதால் தொழில், வேலை, வியாபாரம்ரீதியாக மேன்மை ஏற்படும். இளைய சகோதரர்களால் ஆதாயப் பலன்கள் கிடைக்கும்; மேலும் மாமனார் வழிச் சொத்துகள் உங்களை வந்து சேரும்.

இல்லத்தரசிகளுக்கு சந்தோஷமான அனுபவங்கள் கிடைக்கும் மாதமாக இருக்கும். மாணவர்களைப் பொறுத்தவரை கல்விரீதியாக ஆர்வத்துடன் படிப்பர்; வியாபாரம் ரீதியாக செய்யும் அடுத்த கட்ட முயற்சிகளைத் தயங்காமல் செய்யலாம்.

குடும்பத்தில் மன நிம்மதி அதிகரித்து, சந்தோஷத்துடன் காணப்படுவர். உழைத்தால் மட்டுமே குரு பகவான் கொடுக்க வேண்டியதைக் கொடுப்பார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வருதல் வேண்டும்.

மேலும் உங்களுக்காக...