கன்னி சித்திரை மாத ராசி பலன் 2023!

Published:

கன்னி ராசியினைப் பொறுத்தவரை சப்தம ஸ்தானத்தில் இருந்துவந்த குரு பகவான் 8 ஆம் இடத்திற்குச் சென்றுள்ளார். குரு பகவானின் பார்வையால் யோகம் ஏற்படும், பண வரவு சிறப்பாக இருக்கும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை இதுவரை திருமணம் தள்ளிப் போன நிலையில் எதிர்பார்த்த வரன் கைகூடும். எதிரிகளின் தொல்லைகள் அடங்கும் மாதமாக இருக்கும். தசம ஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் லாப ஸ்தானத்துக்குப் பெயர்ச்சியாகி நீச்ச பலனை அடைகிறார்.

ஏற்கனவே செய்து முடித்த விஷயங்களைக் குறித்துப் பயம் கொள்வீர்கள். மேலும் புது முயற்சிகளைச் செய்யும்போது தடுமாற்றத்துடன் காணப்படுவீர்கள். குடும்பத்துடன் குல தெய்வக் கோயிலுக்குச் சென்று பொங்கலிட்டு வழிபட்டு வாருங்கள்; இதனால் உங்களுக்கு நேரவிருக்கிற கெடு பலன்களில் இருந்து விடுபடலாம்.

குல தெய்வக் கோவிலைப் புதுப்பித்தல் அல்லது கோயிலைச் சுத்தப்படுத்துதல் போன்ற விஷயங்களில் ஈடுபடுங்கள். தந்தைவழி உறவினர்களுடன் பிரச்சினைகள் ஏற்படும்; மூன்றாம் நபர் தலையீட்டால் குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே பெரும் பிரச்சினைகள் ஏற்படும்.

பூர்விகச் சொத்துகள் ரீதியான பிரச்சினைகள் கோர்ட் வரை செல்ல வாய்ப்புண்டு. வேலை செய்யும் இடத்தில் மேல் அதிகாரிகளுடன் வாக்கு வாதங்கள் ஏற்பட வாய்ப்புண்டு; கவனத்துடன் பேசுதல் நல்லது.

தொழில்ரீதியாக அபிவிருத்தி செய்யும் முயற்சியினைத் தற்போதைக்கு தள்ளி வைத்தல் வேண்டும்; இல்லையே பெரும் நஷ்டத்திற்கு இது இட்டுச் செல்லும்.

மேலும் உங்களுக்காக...