சிம்மம் ஆனி மாத ராசி பலன் 2023!

Published:

சிம்ம ராசி அன்பர்களே! ஆனி மாதத்தில் கேதுவின் நட்சத்திரத்தில் சுக்கிரனும்- செவ்வாய் பகவானும் இணைந்து இட அமர்வு செய்துள்ளனர். உடல் ஆரோக்கியம் ரீதியாக கவனம் தேவை; விரயச் செலவாக மருத்துவச் செலவு ஏற்படும்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை உங்கள் கனவு ஈடேறும் வகையில் பதவி உயர்வு கிடைக்கப் பெறும். மேலும் புதிதாக வேலை தேடுவோர் தயங்காமல் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் நிச்சயம் உங்கள் திறமைக்கேற்ற வேலை கிடைக்கப் பெறும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

உடன் பிறப்புகளால் ஆதாயப் பலன்கள் ஏற்படும்; அபாரமான வெற்றிகள் கிடைக்கப் பெறும். மேலும் சிலருக்கு விபரீத ராஜயோகம் அடிக்கும் மாதமாக ஆனி மாதம் இருக்கும்.

திருமணரீதியாக இருந்த தடைகள் தானாகவே விலகும்; மேலும் எதிர்பார்த்த வரன் கைகூடும். பூர்விகச் சொத்துகள் ரீதியாக இருந்துவரும் பிரச்சினைகள் சமாதானத்திற்கு வரும்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையான உறவில் நெருக்கம் ஏற்படும். குல தெய்வக் கோவிலுக்குக் குடும்பத்துடன் சென்று வருவீர்கள். தைரியம், தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் நினைத்த அனைத்தையும் நீங்கள் அடையலாம்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

மேலும் உங்களுக்காக...