ரிஷப ராசி அன்பர்களே! ஆவணி மாதத்தினைப் பொறுத்தவரை அமோகமான மாதமாக இருக்கும். புதன் பகவான் 10 ஆம் இடத்தினைப் பார்வையிடுவதால் வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை பதவி உயர்வு, சம்பள உயர்வு, இடமாற்றம் என நீங்கள் எண்ணிய காரியங்கள் ஈடேறும்.
மேல் அதிகாரிகளின் பாராட்டினைப் பெறுவீர்கள். கணவன் – மனைவி இடையேயான ஒற்றுமை அதிகரிக்கும். 5 ஆம் இடத்தில் செவ்வாய் பகவான் இருப்பதால் பழைய வீட்டினைப் புதுப்பித்தல், புது வீடு கட்டுதல், கட்டிய வீட்டை வாங்குதல் என்பது போன்ற சுப காரியங்களைச் செய்து மகிழ்வீர்கள்.
சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!
பழைய கடன்கள் படிப்படியாகக் குறையும்; தொழில் ரீதியாக எடுத்துக் கொண்டால் நம்பிக்கையான பணியாளர்கள் கிடைப்பர். மேலும் எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கப் பெறும்.
கோர்ட் சார்ந்த வழக்குகளில் தீர்ப்புகள் உங்களுக்குச் சாதகமானதாக இருக்கும். சொத்துகள் ரீதியாக உடன் பிறப்புகளுடன் மனக் கசப்புகள் ஏற்படும். வெளிநாடு செல்லும் முயற்சியினைச் செய்து வருவோருக்கு இது சாதகமான காலகட்டமாக இருக்கும்.
ஆரோக்கிய ஸ்தானத்தை குரு பகவான் பார்வையிடுவதால் உடல் ஆரோக்கியத்தில் இருந்து தொந்தரவுகள் குறைந்து ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். மேலும் குடும்பத்தில் இதுவரை தள்ளிப் போன சுப காரியங்கள் நடந்தேறும்; பிரிந்த உறவினர்கள் மீண்டும் ஒன்று சேர்வர்.
சனி பகவானின் பார்வையால் ஆவணி முதல் வாரத்தில் கணவன்- மனைவி இடையே பிரச்சினைகள் ஏற்படும்.
உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!
அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று மகாலட்சுமி வழிபாடு செய்து வருவது நன்மை பயக்கும்.