மிதுனம் ஆனி மாத ராசி பலன் 2023!

By Gayathri A

Published:

மிதுன ராசி அன்பர்களே! ஆனி மாதத்தில் லக்னத்தில் சூர்யனும்- புதனும் இணைந்துள்ளது பெரும் ஆதாயத்தினை ஏற்படுத்திக் கொடுக்கும். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை சிறு சிறு வாய்ப்புகளும் கை நழுவிப் போன நிலையில் தற்போது பெரிய வாய்ப்புகளும் கைகூடும்.

குழந்தைகளால் பெயர், புகழ் கிடைக்கப் பெறும். சுய தொழில் செய்வது குறித்த உங்களின் ஆசை நனவாகும். உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை சிறு சிறு உடல் தொந்தரவுகள் இருந்துகொண்டே இருக்கும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

உடன் பிறப்புகளுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படும்; ஆனால் சில நாட்களில் மீண்டும் பிணைப்பு ஏற்படும். எடுக்கும் முயற்சிகளைத் தயங்கி, கலக்கத்துடன் எடுப்பீர்கள். ஆனால் நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் நினைத்த காரியத்தைச் செய்து முடிக்கலாம்.

இல்லத்தரசிகள் மகிழ்ச்சியால் நிறைந்து காணப்படுவர். நண்பர்களின் உதவிகள் கிடைக்கப் பெறும். பெயரும், புகழும் அதிகரிக்கும். தொட்டது துலங்கும் மாதமாக ஆனி மாதம் நிச்சயம் உங்களுக்கு இருக்கும்.

பொருளாதாரரீதியாக எடுத்துக் கொண்டால் விரயச் செலவுகள் இருக்கும்; ஆனால் நீங்கள் அதனைச் சுபச் செலவுகளாகச் செய்யுங்கள். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்கவும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

மேலும் உங்களுக்காக...