மிதுனம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2023!

Published:

மிதுன ராசி அன்பர்களே! ராசிநாதன் புதன் 3 ஆம் இடத்தில் உள்ளார். 11 ஆம் இடத்தில் குரு பகவான்- ராகு பகவானுடன் சஞ்சாரம் செய்கிறார். ஆகஸ்ட் மாதத்தினைப் பொறுத்தவரை நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்கும் மாதமாக இருக்கும்.

தொழில்ரீதியாக வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். தொழில்ரீதியாகச் சிறிய அளவிலான முதலீடுகளைச் செய்து அபிவிருத்தி செய்வீர்கள். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை சம்பள உயர்வு, பதவி உயர்வு, இடமாற்றம் சார்ந்த விஷயங்களில் சாதகப் பலன்களே ஏற்படும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

திருமண காரியம் என்று கொண்டால் எதிர்பார்த்த வரன் கைகூடும், திருமண தேதி குறித்தல், நிச்சயதார்த்தம் என விறுவிறுவென காரியங்கள் நடந்தேறும்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை பிரிந்திருந்த கணவன்- மனைவி ஒன்று சேர்வர். வாழ்க்கைத் துணையிடம் பேசும்போது வார்த்தை ப்ரயோகத்தில் மிகக் கவனம் தேவை.

கடந்த காலங்களில் இருந்த இடையூறுகள் நீங்கி தற்போது புதுப்பொலிவான வாழ்க்கையினை வாழத் தயார் ஆவீர்கள். மாணவர்களைப் பொறுத்தவரை மிகத் தெளிவான சிந்தனையுடன் இருப்பர். தன்னம்பிக்கை அதிகரித்துக் காணப்படுவர்.

மேலும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த உங்களின் முடிவுகள் மிகச் சிறப்பானதாகவே இருக்கும். குடும்பத்தின் மீதான பொறுப்புகள் படிப்படியாகக் குறையும். உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் சிறு சிறு தொந்தரவுகள் இருக்கும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

மனதளவிலான பிரச்சினைகளும் உடல் தொந்தரவுகளை அவ்வப்போது கொடுக்கும். வண்டி, வாகனங்கள் ரீதியாக சிறு சிறு செலவினங்கள் இருக்கும்.

மேலும் உங்களுக்காக...