மேஷம் தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் 2023!

Published:

மேஷ ராசியினைப் பொறுத்தவரை பொருளாதாரம் ரீதியாக ஓரளவு தன்னிறைவு நிறைந்த மாதமாக இருக்கும், நஷ்டத்தில் இருந்து மீண்டு லாபத்துக்குள் அடியெடுத்து வைப்பீர்கள்.

வேலைவாய்ப்புரீதியாக உங்கள் கனவு வேலை கிடைக்கும்.  வெளிநாட்டு வேலைவாய்ப்புகள், வெளிநாட்டு முயற்சிகள் சார்ந்த விஷயங்களில் வெற்றி என்பது போன்ற நேர்மறையான விஷயங்கள் நடக்கப் பெறும்.

ஆண்டின் பிற்பகுதியில் உடல் ஆரோக்கியம் ரீதியாக மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும், நீண்ட காலம் எடுத்துதான் ஆரோக்கியம் மேம்படும். உடல் நலன் ரீதியாக கூடுதல் கவனத்துடன் இருத்தல் நல்லது.

பூர்விகச் சொத்துகள் ரீதியான பிரச்சினைகள் சரியாகி, சொத்துகள் கை வந்து சேரும். குழந்தை பாக்கியத்துக்கு எதிர்பார்த்து இருந்தோருக்கு நற் செய்தி கிடைக்கப் பெறும்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரைப் பிரிந்து இருந்த கணவன்- மனைவி ஒன்று சேர்வர். வாழ்க்கைத் துணைக்கு இருந்த உடல் நலக் கோளாறுகள் சரியாகும்.

தந்தையுடன் இருந்துவந்த மனச் சங்கடங்கள், பிரச்சினைகள் சரியாகும், தாய்வழி சொந்தங்களுடன் நெருக்கம் ஏற்படும். கடன் தொல்லை குறையும், அதிர்ஷ்டம் தரும் என்று நம்பி எந்தவொரு முதலீட்டையும் செய்யாமல் இருப்பது நல்லது. நெய் தீபம் ஏற்றி பெருமாளை வழிபாடு செய்து வருதல் நல்லது.

மேலும் உங்களுக்காக...