மேஷம் ஆடி மாத ராசி பலன் 2023!

Published:

ஆடி மாதத்தினைப் பொறுத்தவரை சூர்யன் சிம்ம ராசிக்குப் பெயர்கிறார்; சுக்கிரன் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்; புதன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

மேஷ ராசி அன்பர்களே! ஆடி மாதத்தின் ஆரம்பத்தில் இருந்தே ராசியில் இருக்கும் குரு பகவான் உங்களுக்குச் சாதகமான பலன்களை ஏற்படுத்திக் கொடுப்பார். ராசிநாதன் செவ்வாய் குருவின் பார்வையில் உள்ளார்; உங்களின் தன்னம்பிக்கை அதிகரித்துக் காணப்படுவீர்கள்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

வியாபாரத்தில் புதிய ஆர்வத்தினை ஏற்படுத்துவார்; வேலைவாய்ப்பு ரீதியாக மேல் அதிகாரிகளின் அன்பையும், பாராட்டினையும் சம்பாதிப்பீர்கள். உடல் நலன் என்று கொண்டால் ஆடி மாதத்தின் முற்பகுதியில் சிறு சிறு வயிறு சம்பந்தப்பட்ட உடல் தொந்தரவுகள் இருந்துகொண்டே இருக்கும்.

உங்களின் தனிப்பட்ட முயற்சியின் மூலம் உங்களின் கனவுகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் துணிந்து களம் இறங்குவீர்கள்; ஆனால் பணரீதியாக எடுக்கும் முடிவுகளில் கவனம் தேவை. வீண் செலவுகள் ஏற்படுவதுடன் கடன் ஏற்படவும் வாய்ப்புண்டு.

பொருளாதாரரீதியாக பணவரவு சிறப்பாகவே இருக்கும்; ஆனால் விரயச் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் முடிந்தளவு சுபச் செலவுகளாகச் செய்து முடியுங்கள்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

குழந்தைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவர்; குழந்தைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தொழில்விருத்தி ஏற்படும். அரசாங்கம் சார்ந்த கடனுதவிகள் கிடைக்கப் பெறும்.

மேலும் உங்களுக்காக...