சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்; ராகு- கேது பெயர்ச்சியானது நிகழ்ந்துள்ளது. சனி பகவான் 2 ஆம் இடத்தில் உள்ளார். 9 ஆம் இடத்தில் சுக்கிர பகவான் இட அமர்வு செய்கின்றார்.
குரு பகவான் 4 ஆம் இடத்தில் இட அமர்வு செய்கிறார்; மேலும் அவர் 10 ஆம் இடத்தினைப் பார்வையிடுகிறார். மகர ராசியினைப் பொறுத்தவரை ராகு- கேது பெயர்ச்சியானது நன்மையினைத் தருவதாய் இருக்கும்.
உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!
சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் உங்களுக்குச் சாதகமான பலன்களைக் கொடுப்பார். எந்தவொரு மாற்றத்தையும் தயங்காமல் செய்யுங்கள்; வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
ராகு பகவான் 3 ஆம் இடத்திலும் கேது பகவான் 9 ஆம் இடத்திலும் இட அமர்வு செய்துள்ளனர். சூர்யன் நீச்சம் அடைவார். சூர்யன் நீச்சமடைவது உங்களுக்கு ஆதாயப் பலன்களையே கொடுக்கும்.
செவ்வாய் பகவான் ஆட்சியில் வருவார். செவ்வாய் பகவான் 10 ஆம் இடத்தில் இருந்து 11 ஆம் இடத்திற்குப் பெயர புதன் பகவான்- சூர்ய பகவானுடன் கூட்டணி அமைக்கின்றார்.
வேலைவாய்ப்பினை பொறுத்தவரை நினைத்த மாற்றங்களைத் தைரியத்துடன் செய்யலாம். கிரகங்களின் இட அமர்வு மிகச் சாதகமானதாக இருப்பதால், நீண்ட நாட்கள் நீங்கள் சந்தித்த போராட்டங்களில் இருந்து விடுபடுவீர்கள்.
இட மாற்றம், வேலை மாற்றம், தொழில் மாற்றம் என உங்கள் மனதில் பலவித யோசனைகள் ஓடிக் கொண்டே இருக்கும். தொழிலில் மாற்றங்களைத் தயங்காமல் செய்யலாம்; ஆனால் சுக்கிரன் நீச்சம் அடைவதால் பெரிய அளவிலான முதலீடுகள் இல்லாமல் சிறிய அளவில் முதலீடுகளைச் செய்யுங்கள்.
திருமண காரியங்களைப் பொறுத்தவரை வரன் தேட ஆரம்பிக்கலாம், வரன் கைகூடி வருகையில் முடிந்தளவு உங்களின் வாழ்க்கைத் துணை ஏழரை சனியில் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.
இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை சுக்கிரன் நீச்சமாக இருப்பதால் எடுக்கும் முடிவுகளில் குழப்பம் இருக்கும். மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்க, இடையூறுகள் அப்படியே களைந்து போகும்.
சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!
மாணவர்களைப் பொறுத்தவரை இதுவரை இருந்த அழுத்தங்களில் இருந்து வெளி வருவீர்கள், மேலும் மிகவும் ஆர்வத்துடன் தங்களை படிப்பில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். பழைய வண்டி, வாகனங்களை மாற்றிப் புதுப்பிக்கச் செய்வீர்கள்.