மகரம் கார்த்திகை மாத ராசி பலன் 2023!

மகர ராசியினைப் பொறுத்தவரை கார்த்திகை மாதம் யோகபலத்தினைக் கொடுக்கும் மாதமாக இருக்கும். சனி பகவான் ஆட்சி பெற்றுள்ளார். ஆட்சி பெற்றாலும் 2 ஆம் இடத்தில் அமர்கிறார். லக்கினாதிபதிக்கு சனி பகவான் யோகாதிபதி. சனி பகவான்…

magaram

மகர ராசியினைப் பொறுத்தவரை கார்த்திகை மாதம் யோகபலத்தினைக் கொடுக்கும் மாதமாக இருக்கும். சனி பகவான் ஆட்சி பெற்றுள்ளார். ஆட்சி பெற்றாலும் 2 ஆம் இடத்தில் அமர்கிறார்.

லக்கினாதிபதிக்கு சனி பகவான் யோகாதிபதி. சனி பகவான் அவருக்கு யோகத்தினைக் கொடுப்பார். ஒருவர் முழுமையாக நன்மையினையே பிறருக்குச் செய்கிறார் என்றால் சனி பகவான் தீமை செய்யாமல் நன்மையினையே செய்வார்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

தீங்கான விஷயங்களைச் செய்வோர், தீமை தரும் விஷயங்களைப் பேசுவோர் ஆகியோருக்கு சனி பகவான் தீமையினையே கொடுப்பார். நாம் என்ன கர்மா செய்கிறோமோ அந்த கர்மாவுக்கான பலனையே சனி பகவான் கொடுப்பார்.

தேவையில்லாத கஷ்டத்தினைப் பிறருக்குக் கொடுத்தால் உங்களைக் கஷ்டம் தேடி வரும். அன்னதானம் கொடுங்கள், உடல் ஊனமுற்றோர்களுக்கு வஸ்தர தானம் கொடுங்கள். உங்களால் முடிந்த உதவிகளைப் பிறருக்குத் தானமாகச் செய்யுங்கள்.

நீங்கள் நல்ல விஷயங்களைச் செய்துவரும் பட்சத்தில் சனி பகவான் உங்களுக்கு யோகத்தினை வாரிக் கொடுப்பார். லக்கினத்துக்கு 2 ஆம் அதிபதி ஆட்சி பெற்று இருப்பதால் பொருளாதாரரீதியாக பண வரவு சிறப்பாக இருக்கும்.

மகர ராசிக்காரர்களுக்கு பலமான சிந்தனை, எண்ணங்கள் இருக்கும். செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் உள்ளார். சுப ஸ்தானத்தில் குரு பகவான் இட அமர்வு செய்துள்ளார்.

குடும்பத்துடன் சுற்றுலா, பொழுதுபோக்கு, சினிமா என உங்களை நீங்கள் மகிழ்வாய் வைத்துக் கொள்வீர்கள். பல ஆண்டுகளாகத் தள்ளிப் போன சுப காரியங்கள் வீட்டில் நடந்தேறும். வீடு, மனை வாங்கும் வாய்ப்புகள் அமையப் பெறும்.

லக்கினத்துக்கு 5 ஆம் இடத்திற்கு அதிபதியாக வரக்கூடிய சுக்கிர பகவான் நீச்சம் அடைந்துள்ளார். 13 ஆம் தேதிக்குப் பின்னர் சுக்கிர பகவான் ஆட்சி பெறுவதால் பலம் அதிகரித்துக் காணப்படுவார்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

நினைத்ததை நடத்தி வைக்கக்கூடிய தன்மை உங்களிடத்து அதிகமாக இருக்கும். யோக பலனை புதன் பகவான் வாரிக் கொடுப்பார். சுபத்தினைக் கொடுக்கக்கூடியவராக உள்ளார் புதன் பகவான். பாக்கியவாதிகள் ஒன்று சேர்ந்துள்ளதால் பல சுபம் தரும் விஷயங்கள் வாழ்க்கையில் நடக்கப் பெறும்.