மகரம் கார்த்திகை மாத ராசி பலன் 2022!

Published:

வேலையில்லாதவர்கள், வேலையினை இழந்தவர்கள் என அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். வேலை பறிபோகும் நிலையில் இருந்தவர்களின் பதவி நிரந்தரமானதாக ஆக்கப்படும்.

புதன், சுக்கிரன், சூர்யன் என கிரகங்கள் இணைந்து லாப ஸ்தானத்தில் இருப்பதால் லாபங்கள் கிட்டும்.   கார்த்திகை பிற்பகுதியில் புதனும் சுக்கிரனும் விரய ஸ்தானத்துக்கு இடப் பெயர்ச்சி செய்கின்றனர். இதனால் தந்தைரீதியாக விரயச் செலவுகள் ஏற்படும்.

செவ்வாய் ராசிக்கு 5 ஆம் இடத்தில் இருப்பார். குழந்தைகள் பிடிவாதம் மிகுந்து காணப்படுவர். மேலும் குழந்தைகளால் சில மன வருத்தங்கள் ஏற்படும். தொழில்ரீதியாக எதிரிகள் பலம் பெறுவார்கள், தொழில் கூட்டாளர்களுடன் கவனமாகச் செயல்படுதல் நல்லது.

புதிய முதலீடுகளில் தற்போதைக்கு கவனம் செலுத்தாமல் இருத்தல் நல்லது. பெரும் முதலீடு நஷ்டத்துக்கு இட்டுச் செல்லும். சேர்த்து வைத்த சேமிப்புகள் மறைமுகச் செலவுகளால் வீணாகிப் போகும். மேலும் பணத் தட்டுப்பாடு வீட்டில் இருக்கும், இதனால் வீட்டில் பிரச்சினைகள் ஏற்படும்.

கணவன் வேலைவாய்ப்புரீதியாக குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடு செல்ல வாய்ப்புண்டு. உடன் பிறப்புகளுடன் பிரச்சினை ஏற்படும், பூர்விகச் சொத்துகள் ரீதியாக விரயச் செலவுகள் ஏற்படும்.

மேலும் உங்களுக்காக...

Leave a Comment