கும்பம் கார்த்திகை மாத ராசி பலன் 2022!

Published:

எந்தவொரு விஷயத்திலும் மந்தத் தன்மை இருக்கும், மேலும் எடுக்கும் முடிவுகளில் தடுமாற்றங்கள் இருக்கும். ராசிக்கு 4 ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் ஆரோக்கியம் குறைந்து காணப்படுவீர்கள்.

செவ்வாயின் பார்வை 7 ஆம் இடத்தில் இருப்பதால் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். மூன்றாம் நபர்களின் தலையிடு குடும்பத்தில் இல்லாமல் இருத்தல் வேண்டும்.

தசம ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரன், சூர்யன், புதன் கார்த்திகை இரண்டாம் பகுதியில் லாப ஸ்தானத்திற்கு இடப்பெயர்வு அடையும். குழந்தைகளால் ஆதாயம் ஏற்படும், தொழில்ரீதியாக வளர்ச்சி இருக்கும்.

தொழிலை அபிவிருத்தி செய்யும் முயற்சியில் களம் இறங்குவீர்கள். முடிந்தவரை சூர்ய பகவான் கோவிலுக்குச் சென்று வருதல் நல்லது, இல்லையேல் குறைந்தது வீட்டில் சூர்ய நமஸ்காரம் செய்து வாருங்கள்.

ராசிக்குள் சனி பகவான் இருப்பதால் எந்தவொரு செயலையும் செய்யும் முன் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செயல்படவும். உங்களை உதாசீனப்படுத்திய உறவினர்கள் உங்களைத் தேடி வருவர்.

வேலை தேடுவோருக்கு புது வேலை கிடைக்கும். ஆனால் மேல் அதிகாரிகளுடன் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும். எதிரிகள்கூட உங்களுக்கு உதவுவார்கள்.

மேலும் உங்களுக்காக...

Leave a Comment