மகரம் ஆடி மாத ராசி பலன் 2023!

Published:

ஆடி மாதத்தினைப் பொறுத்தவரை சூர்யன் சிம்ம ராசிக்குப் பெயர்கிறார்; சுக்கிரன் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்; புதன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

மகர ராசி அன்பர்களே! இந்த மாதம் சங்கடங்கள் நிறைந்த மாதமாக இருக்கும். செவ்வாய்- சுக்கிரன் இணைந்து 8 ஆம் இடத்தில் மறைகின்றனர்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

செவ்வாய் பகவான்- சுக்கிர பகவானின் மறைவு எதிரிகளை அதிகப்படுத்தும். உத்தியோக ரீதியாக தடுமாற்றம் ஏற்படும்; மேலும் உங்களின் செல்வாக்கு சற்று சரிய நேரிடும்.

பணவிவகாரங்களில் சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாமல் கஷ்டப்படுவீர்கள். மேலும் வாங்கிய கடனை குறித்த நேரத்தில் அடைக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள்.

மேலும் பண ரீதியாக நீங்கள் பிறருக்கு உதவும்போது உங்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு. சுப விரயம் ஏற்படும். தொழில்ரீதியாக அபிவிருத்தி செய்யும் முயற்சியில் களம் இறங்குவீர்கள்.

பணம் கொடுக்கல் வாங்கலில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுதல் வேண்டும். நட்பு வட்டத்தில் தேவையற்ற பேச்சுகளால் வாக்குவாதங்கள், பிரச்சினைகள் ஏற்படும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளும் பெரும் பிரச்சினைகளாகும். எந்தவொரு செயலைச் செய்யும் முன்னரும் தாயாரின் ஆலோசனையினைப் பெறுவது நல்லது.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை மேல் அதிகாரிகளுடன் நேரடியாகப் பிரச்சினை ஏற்பட வாய்ப்புண்டு; வேலைப் பளு அதிகரிக்கும்.

மேலும் உங்களுக்காக...