கும்ப ராசி அன்பர்களே ஜூலை மாதத்தினைப் பொறுத்தவரை குரு பகவானின் இட அமர்வுரீதியாக எடுத்துக் கொண்டால் இது பொருளாதாரத்திற்குச் சாதகமான மாதமாக இல்லை. வேலைவாய்ப்பு என்று எடுத்துக் கொண்டால் இருக்கும் வேலையினைவிட்டு புது வேலைக்கு முயற்சிக்க வேண்டாம்.
மேலும் பணி செய்யும் இடத்தில் அதிக அளவில் வேலைப் பளு இருக்கும்; சக பணியாளர்களுடன் இணக்கமான சூழ்நிலை இராது. பணம் கொடுக்கல், வாங்கலில் மிகக் கவனம் தேவை. புதுத் தொழில் துவங்கினாலோ அல்லது அபிவிருத்தி சார்ந்த முயற்சியினையோ கூட்டுத் தொழிலாக செய்யவே வேண்டாம்.
சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!
பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட் என்பது போன்ற பணரீதியான அபாயகரமான தொழில் செய்வோர் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எந்தவொரு செயலையும் செய்யவும்.
திருமண காரியங்களைப் பொறுத்தவரை வரன் எதிர்பார்த்ததுபோல் அமையாது; தடங்கல்கள் இருப்பதால் இந்த ஒருமாதகாலத்திற்கு வரன் பார்ப்பதை தள்ளி வைத்துவிடுவது நல்லது.
சுக்கிரன்- செவ்வாய் பகவானின் பார்வை ஏற்கனவே இருக்கும் விஷயங்கள் கைநழுவிப் போகாமல் தக்க வைக்க உதவும். மாற்றத்தினை நோக்கி நகர வேண்டாம்; மாற்றம் ஏற்பட்டாலும் அதனைச் சிந்தித்து மட்டுமே ஏற்றுக் கொள்ளவும்.
செவ்வாயின் பார்வையால் குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை தொடர் போராட்டங்கள் நிறைந்ததாகவே இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனும், உறவினர்களிடமும், நண்பர்களிடமும் மனக் கசப்புகள் ஏற்படும்.
உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!
உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் தாய்- தந்தையரின் உடல் நலனில் அக்கறை தேவை.