கடகம் அதிசார கும்ப சனி பெயர்ச்சி பலன்கள் 2023!

Published:

உங்களுக்கு இந்த வருடம் முதல் அஷ்டம சனி ஆரம்பித்தாலும் ஒரு சிலருக்கு மட்டுமே அதிக சிரமங்களும் அலைச்சல்களும் உண்டாகும்.

புனர்பூசம் நட்சத்திரம் பிறந்தவர்கள் தினமும் 108 முறை ’ஓம் ஹ்ரீம் பம்
அசிதாங்க பைரவாய நமக’ என்ற மந்திரத்தை எழுதி வர வேண்டும் அல்லது தினமும் மேலே கூறியுள்ள நட்சத்திர பைரவ மந்திரத்தை ஜெபித்துக்கொண்டு நவக்கிரகத்தை 27 முறை வலம் வர வேண்டும். இப்படி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று வலம் வர வேண்டும். இந்த வருடம் முழுவதும் வாரம் தோறும் இவ்வாறு வலம் வர வேண்டும் அல்லது பைரவரின் வாகனமான தெரு நாய்களுக்கு தினமும் உணவு தானம் செய்து வர வேண்டும்.

பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ’ஓம் ஹ்ரீம் பம் குரோதன பைரவாய நமக’ என்ற மந்திரத்தை ஜெபித்துக் கொண்டு நவக்கிரகத்தை 27 முறை வலம் வர வேண்டும் .இப்படி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று வலம் வர வேண்டும். இந்த வருடம் முழுவதும் வாரம் தோறும் இவ்வாறு வலம் வர வேண்டும் அல்லது பைரவரின் வாகனமாக இருக்கும் தெரு நாய்களுக்கு தினமும் உணவு தானம் செய்து வர வேண்டும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ’ஓம் ஹ்ரீம் பம் உன்மத்த பைரவாய நமக’ என்ற மந்திரத்தை ஜெபித்துக் கொண்டு நவக்கிரகத்தை 27 முறை வலம் வர வேண்டும். இப்படி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று வலம் வர வேண்டும். இந்த வருடம் முழுவதும் வாரம் தோறும் இவ்வாறு வலம் வர வேண்டும் அல்லது பைரவரின் வாகனமாக இருக்கும் தெரு நாய்களுக்கு தினமும் உணவு தானம் செய்து வர வேண்டும்.

இதை செய்ய இயலாதவர்கள் மாதாந்திர சனிக்கிழமை நாள் ஒன்றில் உங்கள் ஊரில் பழமையான சிவன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு சனிக்கிழமை காலை 6 மணிக்கு மேல் 8 மணிக்குள் சந்தன காப்பு அணிவிக்க வேண்டும். ஒரிஜினல் புனுகு தடவ வேண்டும். சிவப்பு அரளி மாலை அணிவிக்க வேண்டும். உங்கள் பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். பூசாரிக்கு கண்டிப்பாக ரூபாய் 108 காணிக்கை தர வேண்டும். நாளை காலையில் வருவேன் இந்த சந்தன காப்பை எனக்கு தாங்கள் தர வேண்டும் என்று பூசாரியிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்குள் மீண்டும் அதே கோயிலுக்கு செல்ல வேண்டும்.

பூசாரியிடம் பைரவருக்கு அணிவிக்கப்பட்ட சந்தன காப்பு முழுவதையும் வாங்கிக் கொண்டு வர வேண்டும். அப்போது ஒரு முறை பூசாரிக்கு மீண்டும் ரூபாய் 108 காணிக்கை தர வேண்டும். அதை தினமும் சிறிது உங்கள் நெற்றியில் அணிந்து கொண்டு அந்த நாளை ஆரம்பிக்க வேண்டும். இவ்வாறு செய்ததன் மூலமாக சனி பகவான் பெருமகிழ்ச்சி அடைந்து உங்களுக்கு தர வேண்டிய துன்பங்களை மிகச் சிறிய அளவில் மட்டுமே தருவார். சந்தன காப்பு தீர்ந்ததும் மீண்டும் இதே போல செய்ய வேண்டும்.

இந்த வருடம் முழுவதும் கடக ராசி அன்பர்கள் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. யாருக்கும் கடன் வாங்கி தரக்கூடாது. மிக மிக அவசியமாக இருந்தால் மட்டுமே கடன் வாங்க வேண்டும். கடந்த கால சேமிப்புகளை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மிக எளிமையான வாழ்க்கை இந்த வருடம் முழுவதும் வாழ வேண்டும்.

சனி பகவானின் குரு காலபைரவர் ஆவார். எனவே காலபைரவரை முறைப்படி வழிபட்டால் சனி பகவான் பெரு மகிழ்ச்சி அடைவார். மேலே கூறிய பைரவ வழிபாடு செய்பவர்கள் இந்த வருடம் முழுவதும் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக்கூடாது. மது அருந்தக்கூடாது. ஒரே ஒரு நாள் கூட இப்படி செய்யாமல் இருந்தால் மட்டுமே பைரவ வழிபாடு பலன் தரும்.

சிவராஜ யோக ஜோதிடர்
வீரமுனி சுவாமிகள்
+919629439499
ராஜபாளையம்.

மேலும் உங்களுக்காக...