மிதுனம் அதிசார கும்ப சனி பெயர்ச்சி பலன்கள் 2023!

Published:

உங்களுடைய வாழ்க்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகவும் எரிச்சல் மற்றும் விரக்தி கலந்ததாக இருந்தது. அந்த நிலை இனிமேல் இந்த சனி பெயர்ச்சி முதல் மாறப்போகிறது.

கடந்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளாக உங்களை விட்டு விலகிச் சென்ற நட்பு வட்டம் மற்றும் உறவினர் வட்டம் உங்களை மீண்டும் தேடி வர ஆரம்பிக்கும்.

இதுவரை உங்களை தவறாக நினைத்த ஒவ்வொருவரும் உங்கள் மீது எந்த குற்றமும் இல்லை என்று உங்களை புரிந்து கொண்டு மீண்டும் தேடி வர ஆரம்பிப்பார்கள். பிரிந்திருந்த கணவன் மனைவி சுமூகமான முறையில் ஒன்று சேர்ந்து வாழ ஆரம்பிப்பார்கள்.

பள்ளி கல்லூரியில் படிக்கும் மிதுன ராசி மாணவ, மாணவிகள் நல்ல தேர்ச்சி பெறுவார்கள்.

லாப ராகு, லாப குரு ,பாக்கியஸ்தான சனி மூவரும் உங்களுடைய கடந்த கால ருணத்தை படிப்படியாக இந்த வருடம் வருடத்தில் தீர்த்து விடுவார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்பாக நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்து இருந்த அவசரகால பணம் இப்பொழுது உங்களுக்கு திரும்ப கிடைக்க ஆரம்பிக்கும். இந்த ஆண்டு முழுவதும் கூடுமானவரை சிக்கனமாக இருக்க பழகவும் .

யோகா, பிராணயாமா, ஹீலிங், சித்த மருத்துவம் போன்ற பாரம்பரிய கலைகள் ஏதாவது ஒன்றை இந்த ஆண்டின் மத்தியில் கற்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். இது உங்களுக்கு அடுத்த வருடத்தில் இருந்து வாழ்நாள் முழுவதும் மிகவும் பக்க பலத்தை தரும்.

உங்களுடைய அம்மா வழி முன்னோர்கள் செயற்கையான முறையில் இறந்துள்ளார்கள். அவர்களுக்கு கதி மோட்சம் கொடுக்கக்கூடிய பொறுப்பு உங்களுக்கு இந்த வருடத்தில் இருக்கிறது. எனவே இந்த வருடத்தில் நீங்கள் மூன்று கடல்கள் அல்லது மூன்று நதிகள் சந்திக்க கூடிய இடத்தில் ஒரு முறை திலா ஹோமம் செய்வது அவசியமாகும். இதன் மூலமாக உங்களுடைய குடும்பத்தில் கடந்த 15 அல்லது 25 ஆண்டுகளாக இருந்து வந்த ஒரு பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும்.

சிவராஜ யோக ஜோதிடர்
வீரமுனி சுவாமிகள்
+919629439499
ராஜபாளையம்.

மேலும் உங்களுக்காக...