தனுசு ஆகஸ்ட் மாத ராசி பலன் 2023!

Published:

தனுசு ராசி அன்பர்களே! ஆகஸ்ட் மாதத்தினைப் பொறுத்தவரை வளர்ச்சியினை நோக்கியதாகவே உங்கள் வாழ்க்கை உள்ளது. வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை பதவி உயர்வு தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும். வேலைரீதியாக மாற்றம் செய்ய நினைத்தால் நிச்சயம் உங்களின் முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும்.

பொருளாதாரரீதியாக எடுத்துக் கொண்டால் வாங்கிய கடன் சுமை கழுத்தை நெரிக்கும். தொழில்ரீதியாக முயற்சிகள் எடுக்கும்போது கையில் இருக்கும் பொருளாதாரத்தினைக் கணக்கிட்டு சிந்தித்துச் செயல்படுங்கள்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

குழந்தைகளால் பெரிய அளவில் ஆதரவு இருக்காது; குழந்தைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வீடு கட்டிய நிலையில் பொருளாதார நெருக்கடியால் பாதியிலேயே கிடப்பில் போட்டு இருப்பீர்கள்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை சிறிது காலம் தள்ளிப் போகும். பிரிந்த உறவினர்கள் மீண்டு ஒன்று சேரும் முயற்சியில் களம் இறங்குவர். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் சரியாகி புரிந்துணர்வுடன் நடந்து கொள்வர்.

மாணவர்களைப் பொறுத்தவரை மிகச் சிறந்த காலகட்டமாக இருக்கும்; சிறப்பாகத் திட்டமிட்டு அதனை மிக நேர்த்தியாக செயல்படுத்துவீர்கள். இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் இருந்த பல பிரச்சினைகளில் இருந்தும் மீண்டு ஓரளவு மன அமைதியுடன் காணப்படுவீர்கள்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

உடல் ஆரோக்கியம் என்று எடுத்துக் கொண்டால் ஏற்கனவே இருந்த பெரிய உடல் தொந்தரவுகளில் இருந்து மீள்வீர்கள்.

மேலும் உங்களுக்காக...