தனுசு ஆனி மாத ராசி பலன் 2023!

Published:

தனுசு ராசி அன்பர்களே! குடும்பத்தில் அந்நியர் தலையீடு வேண்டாம்; இது பெரிய அளவிலான பிளவினை குடும்பத்தில் ஏற்படுத்தி விடும். பெரியோர்களுடன் கோபதாபங்கள் கொள்ள வேண்டாம். மேலும் முன்பு வாங்கிய கடனை அடைக்கமுடியாமல் கஷ்டப்படுவீர்கள்.

வீடு கட்டி வந்தோர் பொருளாதார நெருக்கடியால் அதனை பாதியில் நிறுத்தி வைக்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். குழந்தைகள் பெரிய அளவில் கல்வியில் நாட்டம் காட்டாமல் இருப்பர். குழந்தைகளின் கல்விரீதியாகச் செலவினங்கள் ஏற்படும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

தாயாரின் உடல் நலன் ரீதியாகச் செலவினங்கள் ஏற்படும், வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை பதவி உயர்வு தள்ளிப் போகும். மேலும் திடீர் இடமாற்றம் ஏற்படும் நிலையும் உள்ளது. கணவன்- மனைவி இடையே புரிதல் ஏற்படும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை சிறு சிறு தடைகள் இருந்துகொண்டே இருக்கும்; ஆனால் மனம் தளராமல் வரன் தேடுங்கள்; எதிர்பார்த்த வரன் கைகூடும்.

புதிதாக முதலீடுகள் எதையும் செய்ய வேண்டாம்; முடிந்தளவு கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். இல்லத்தரசிகள் பெரிய அளவில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் இருப்பர்.

பூர்விகச் சொத்துகள் ரீதியாக இழுபறி நீடிக்கும். இளைய சகோதரருடன் நல்லிணக்க ஏற்படும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

மேலும் உங்களுக்காக...