தனுசு ராசியா நீங்கள்….. உங்களுக்கு குருவின் அருள் இருந்தால் நிச்சயமாக எதையும் சாதிக்கலாம்..!

Published:

தனுசு ராசியில் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன் மூளையையே பலமாகக் கொண்டு மற்றவர்களை விட முன்னுக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள். தன் எண்ணத்தையே மற்றவர்களுக்கு செயலாக மாற்றக்கூடிய வல்லமை படைத்தவர்கள்.

பல சோதனைகள் வந்தாலும் அதைத் தகர்த்தெறிந்து வரக்கூடியவர்கள். ஆளுமைத் திறனைக் கொண்டு வாழக்கூடியவர்கள். இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் குரு அருள் உண்டு. ஒரு பெரிய மனிதர்களுடைய கனெக்ட் இருந்து கொண்டே இருக்கும். அவர்களுக்கும் உங்களுக்கும் ஒரு கனெக்ட் இருந்தாலே போதும். எடுக்கிற காரியங்கள் வெற்றி தான்.

Guru
Guru

குடும்ப உறுப்பினர்களான மற்றவர்களை விட நீங்கள் முன்னுக்கு வர வேண்டும் என்று எண்ணுபவர்கள். அந்த ஆசையும் நிறைவேறும். பலர் ஜட்ஜாக இருப்பார்கள். ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று எண்ணிவிட்டால் அதைத் துணிந்து செய்பவர்கள்.

ஒண்ணுமே தெரியாமல் வரவர கத்துக் கொண்டே இருப்பார்கள். ஒண்ணுமே தெரியாது. ஆனால் தெரிந்த மாதிரியே இருப்பீங்க. மற்றவர்கள் சொல்லிட்டாங்களே என அதைக் கற்றுக்கொள்வீர்கள். இது ஒரு அதிசயம். கடவுளின் வரப்பிரசாதம்.

பெருமாளின் அருள். குருவின் அருள் உண்டு. நிறைய நெருக்கடிகளும் உண்டு. உங்கள் முன்னால் ஓகே சொல்லிவிட்டுப் போவார்கள். ஆனால் சென்ற பின் வறுத்தெடுப்பார்கள். அதையும் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு.

மற்றவர்களின் எண்ணத்தை எடை போடக்கூடியவர்கள் தனுசு ராசிக்காரர்கள். டைரக்டர் எல்லாம் தனுசு ராசியில் இருந்தால் புரொடியூசர் அவர் நினைத்தபடியே செய்வார். இதைப் புரொடியூசர் கவனிக்க வேண்டும். சக்சஸா தான் எடுப்பார்கள். அதற்குக் கடவுள் அருள்புரிவார். அந்த முயற்சியும் வெற்றிபெறும். இதுதான் தனுசு ராசியின் பிறவி குணம்.

Dhanusu
Dhanusu

மூலநட்சத்திரத்தை யாரும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. அது ஒண்ணும் துஷ்ட நட்சத்திரம் கிடையாது. ஆண்மூலம் அரசாளும். பெண்மூலம் நிர்மூலம் என பயமுறுத்தக்கூடாது. இது அனுமனின் நட்சத்திரம். எவ்வளவு சோகங்கள் வந்தாலும், துக்கங்கள் வந்தாலும் தன்னைக் காட்டிக் கொள்ளாமல் முகமலர்ச்சியுடன் இருக்கும்.

இவரைத் திருமணம் செய்து கொள்ளும் பெண் எங்குமே தங்களது சோகங்களை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள். இவர்கள் விசுவாசிகள். இறைவனுக்கும், முதலாளிக்கும், குடும்பத்துக்கும் விசுவாசமிக்கவர்கள். இவர்கள் கெட்டதையே பண்ண மாட்டார்கள்.

குடும்பத்தில் நேர்மையாகவே இருப்பார்கள். மற்றவர்கள் இவர்களிடம் பேச விரும்புவர். ஸ்ரீரங்கம் பெருமாளை வணங்குங்க. 107 திவ்ய தேசங்களை சீக்கிரமாகப் பார்க்க முயற்சி பண்ணுங்க. 108ஐ பார்க்க முடியாது. அது வைகுண்டம்.

Srirangam perumal
Srirangam perumal

பெருமாள், குரு மேல் ஆர்வம் அதிகம் வந்தால் உங்களுக்கு வெற்றி அதிகமாகும். லாபங்கள் நிறைய உண்டு. மல்லிகைப்பூ கொண்டு முருகருக்கு அர்ச்சனை பண்ணுங்க. சந்தனம் எப்போதும் நெற்றியில் இருக்க வேண்டும். நவரத்தின மோதிரம், யானை முடி மோதிரம், பெருமாள் படத்துடன் மோதிரம், கழுத்தில் மெல்லிய செயின் போடலாம்.

மஞ்சள் பொருளை வைப்பவர்களுக்கு வருமானம் வந்து கொண்டே இருக்கும். சின்னதா ருத்ராட்சை போடுங்க. ரொம்ப அழகா இருக்கும். கர்வத்தையும், கௌரவத்தையும் கலந்து வெற்றி நடை போடுபவர்கள். நீங்கள் எண்ணத்திலும், சந்தோஷத்திலும் உங்களை உயர்த்த உயர்த்த உங்களது வாழ்க்கை உயரும்.

 

 

மேலும் உங்களுக்காக...