பிறந்த தேதி பலன்கள்: 6-ம் தேதியில் பிறந்தவரா நீங்கள்? உங்களுக்கான பலன்கள் இதோ!

மிகவும் ராசியான நபர்களாகக் கருதப்படும் 6 ஆம் தேதியில் பிறந்தவர்களே! மிகவும் கன்னியமாக நடந்து கொள்ளும் முறையினை உங்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அனைவரும் சொல்லும்படியாக எடுத்துக்காட்டாக இருப்பீர்கள். மற்றவர்களை வசீகரப்படுத்துவதில்…

pirantha naal palan day 6

மிகவும் ராசியான நபர்களாகக் கருதப்படும் 6 ஆம் தேதியில் பிறந்தவர்களே! மிகவும் கன்னியமாக நடந்து கொள்ளும் முறையினை உங்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அனைவரும் சொல்லும்படியாக எடுத்துக்காட்டாக இருப்பீர்கள்.

மற்றவர்களை வசீகரப்படுத்துவதில் உங்களை அடித்துக் கொள்ளவே முடியாது; வசீகரக் குணம், வசீகர முகம், வசீகர ஆற்றல் கொண்டவர் நீங்கள். மிகச் சிறிய விஷயத்தினையும் பெரிய சந்தோஷம்போல் ஏற்றுக் கொண்டு மகிழ்வீர்கள். சுக்கிர பகவானின் பரிபூரண ஆசிர்வாதம் கிடைக்கப் பெற்றவர் நீங்கள்.

மற்றவர்களுக்குக் கீழ் இருப்பது உங்களுக்குப் பிடிக்காது; நீங்கள் சொல்வதை பிறர் கேட்டு நடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் நீங்கள். சிறு வயதிலேயே அனைத்துச் சுகங்களும் உங்களுக்குக் கிடைக்கும், அழகு, ஆடைகளுக்காக அதிக அளவு மெனக்கெடுவீர்கள்.

பணவரவு தாராளமாகவே இருக்கும். உங்கள் மன விருப்பப்படியே காதல் வாழ்க்கை அமையும்; அது சிறப்பாக திருமணத்திலும் முடியும். தலைமைப் பொறுப்பு உங்களுக்குத் தானாகவே இயற்கையில் இருக்கும்; முயற்சிகளுக்கான வாய்ப்புகள் காலம் கழித்துக் கிடைக்கும். ஆனால் வெற்றியின் சுவையினை நீங்கள் நிச்சயம் ஆனந்தத்துடன் சுவைப்பீர்கள்.

33 வயதுக்கு மேல் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். மன வலிமையுடன் போராடி எந்தவொரு விஷயத்திலும் வெற்றி காண்பீர்கள். பணம், சொத்து சார்ந்த விஷயங்களில் நாட்டம் சற்று கூடுதலாகவே இருக்கும்.

அதிர்ஷ்ட தேதிகள் மற்றும் நிறங்கள்

6 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்டத் தேதிகள்: 9,18,27

நீங்கள் தவிர்க்க வேண்டிய தேதிகள்: 3,12,21

உங்களுக்கு உகந்த நிறங்கள்: பச்சை நிறம், வெளிர் பச்சை நிறம்

தவிர்க்க வேண்டிய நிறங்கள்: இளம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறங்களைத் தவிர்க்கவும்.

உங்களுக்கு உகந்த நவரத்தினக் கல்- மாணிக்கக் கல் பயன்படுத்தவும்; மேலும் இதனை தங்கத்துடன் மட்டுமே போடவும்.

தொழில் துறை- நீதித் துறை, அழகு சாதனப் பொருட்கள் விற்பனை, பட்டு மற்றும் ஜவுளி விற்பனை, பூ ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில், தையல் தொழில் போன்றவை உங்களுக்கு ஏற்ற துறைகளாகும்.

லட்சுமி தேவியை வழிபாடு செய்து வாருங்கள். லட்சுமிக்கு உகந்த நாட்களில் விரதமிருந்து பூஜைகள் செய்து வரவும்.