தமிழ் சினிமாக்களில் டான்ஸ் ஆடும் நடிகர்களை அந்தக்காலத்தில் இருந்து ரகம் ரகமாக பிரித்து விடலாம். அந்தக்காலத்து சந்திரபாபு, நாகேசில் இருந்து பலரும் நடனக்கலையில் தேர்ச்சி பெற்றவர்களே.
நாகேசின் மகன் ஆனந்த பாபு நல்ல ஒரு டிஸ்கோ டான்ஸர் இவரின் டான்ஸ் திறமையை நானொரு டிஸ்கோ டான்ஸர் என்ற பாடலின் மூலமும், என்னோடு பாட்டுப்ப்பாடுங்கள் பாடலின் மூலமும் அறியலாம்.
கமலஹாசனின் நடனமும் தமிழ்சினிமாவில் அனைவரும் அறிந்ததே. கமலஹாசனுக்கு அடுத்து டான்ஸ் ஆடுவதில் வல்லவர்கள் விஜய், மற்றும் சிம்பு.
மோசமாக திட்டிய வடிவேலு.. எதிரியா தன்னை பார்த்த போதும் கேப்டன் விஜயகாந்த் எடுத்த அக்கறை..
லாரன்ஸ், ராஜு சுந்தரம், பிரபுதேவா போன்றவர்களுக்கு நடன இயக்குனர் தொழில் முக்கிய தொழில் என்பதால் அவர்கள் டான்ஸில் பட்டைய கிளப்புவதில் ஆச்சரியமில்லை.
தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்கள் விஜயகாந்த், ரஜினிகாந்த், சத்யராஜ், பிரபு போன்றவர்கள் எல்லாம் பெரிய அளவில் சினிமாவில் டான்ஸ் ஆடாதவர்கள். விஜயகாந்த்தும் இதில் அடங்குவார்.
விஜயகாந்த் பரதன் என்ற படத்தில் நடித்திருப்பார் எஸ்.டி சபா இயக்கத்தில் 93ல் வெளியான இப்படத்தில் புன்னகையில் மின்சாரம் என்ற பாடல் புகழ்பெற்றது.
இளையராஜா, ஜானகி குரலில் வெளியான இப்பாடலில் இதுவரை இல்லாத அளவு விஜயகாந்த் கடுமையான நடன அசைவுகளை வெளிப்படுத்தி இருப்பார். இந்த பாடலுக்கு விஜயகாந்த்தை ஆட்டுவித்தவர் நடன இயக்குனர் பிரபுதேவா ஆவார்.
இந்தப் பாடலில் விஜயகாந்த் அபாரமான நடனத்தை வெளிப்படுத்தி இருப்பார். நடிப்பு சண்டை காட்சிகள் மட்டுமல்லாமல் நடனத்திலும் விஜயகாந்த் தனது ரசிகர்களை மகிழ்வித்து இருப்பார்.
சினிமாவில் தனது திறமையை வெளிப்படுத்தியவர் நிஜ வாழ்வில் மக்கள் மீது அளப்பரிய அன்பை வெளிப்படுத்தினார். துயரப்படும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தார். உணவின்றி தவிப்பவர்களுக்கு வயிறார உணவு வழங்கினார்.
இப்படி பல நன்மைகளை செய்த விஜயகாந்த் இன்று மக்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளார். உடல் நல குறைவால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்தார். இது திரையுலகத்தினர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.