Cho Ramasamy: திரையுலகில் நடிகராக மட்டுமல்லாமல் பத்திரிகை துறையிலும் சிறந்து விளங்கியவர் சோ ராமசாமி. தமிழில் அரசியல் நையாண்டி செய்து புதுமை புகுத்திய பத்திரிக்கை துக்ளக். துக்ளக் வார இதழை 1970 ஆம் ஆண்டு சோ ராமசாமி ஆரம்பித்தார்.
ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்தில் இருந்து அரசியல் நையாண்டிகள் செய்து சினிமாவில் காமெடி செய்து வந்த சோ ராமசாமியால் ஆரம்பிக்கப்பட்ட இந்த பத்திரிக்கை வித்தியாசமான அரசியல் பார்வையால் ரசிகர்களை ஈர்த்தது.
22 நாடகங்கள் எழுதிய சோ ராமசாமியின் முகமது பின் துக்ளக் என்ற அரசியல் நையாண்டி நாடகம் மிகவும் புகழ்பெற்றது. பின்னாளில் அது திரைப்படமாகவும் வெளியானது. 1957 முதல் நாடகங்கள் எழுதத் தொடங்கிய சோ ராமசாமி 14 திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார்.
அதோடு 200 திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். சினிமாவில் சோ வின் காமெடி எப்போதும் வித்தியாசமாக இருக்கும். நடைமுறை வாழ்வு காமெடியோடு கொஞ்சம் சூசகமாக அரசியலையும் கலந்து விடும் பாங்கு சோவுக்கு உண்டு.
எஸ்.பி முத்துராமன் இயக்கி ரஜினிகாந்த் நடித்த குரு சிஷ்யன், அதிசயப்பிறவி போன்ற படங்களில் அரசியலுக்கு சம்பந்தமில்லாத கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ரகளையான அரசியல் காமெடிகள் செய்திருப்பார்.
படக்குழுவை காட்டமாக பேசிய பத்திரிக்கையாளர்.. சரத்குமார் செய்த செயல்.. குவிந்த பாராட்டுக்கள்..!!
அதிசயப்பிறவி ஒரு காமெடிப்படம் அந்த படத்தில் இறந்து எமலோகம் செல்லும் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருப்பார். அங்கே எமதர்மன் சபையில் சித்திரகுப்தனுக்கு உதவியாளனாக விசித்திர குப்தன் கதாபாத்திரத்தில் சோ ராமசாமி நடித்திருப்பார்.
மேலுலக காட்சிகளிலும் அரசியல் அனல் தெறிக்க விட்டிருப்பார். சோவின் கையை பிடித்து விடாமல் குலுக்கும் ரஜினிகாந்த்தை பார்த்து கை கை கை கை போச்சு கை போச்சு என அன்றைய காங்கிரஸ் கட்சியை வாரி இருப்பார்.
இது போல சில காட்சிகளில் எமதர்மனை பார்த்து சத்தம் போடும் ரஜினியை சித்திரகுப்தன் வி.கே ராமசாமி பிரபு என்ன இவன் நம்மையே சபிக்கிறான் என்பார். அதற்கு சோ, இது ஆட்சியாளர்கள் சாபத்திற்கு உள்ளாகும் காலம் என்பார்.
இது போல அரசியல் நையாண்டிகளை யாரும் புண்படாதபடி சூசகமாக சொல்வதில் சோ வுக்கு நிகர் அவர் மட்டுமே. அதோடு இவர் பத்ம பூசன் விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.