கணவர், மகன் ரெண்டு பேரையும் இழந்தவர்.. யாருக்கும் நடக்கக்கூடாத சோகம்.. வாழ்வின் பெரும் துயரை கவிதா கடந்தது எப்படி?

தமிழ் திரை உலகில் ஒரு சில படங்களில் நாயகியாகவும் ஏராளமான படங்களில் குணச்சித்திர நடிகையாகவும் நடித்து புகழ் பெற்றவர் நடிகை கவிதா. ஆந்திராவைச் சேர்ந்த இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழி திரைப்படங்களில் சமமாக நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. 11 வயதிலேயே அவர் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்தார். தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்த அவருக்கு கடந்த 1976 ஆம் ஆண்டு ’ஓ மஞ்சு’ என்ற தமிழ் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதனை அடுத்து அவர் சகோதர சபதம், ஆட்டுக்கார அலமேலு, காற்றினிலே வரும் கீதம், அந்தமான் காதலி, ஜெனரல் சக்கரவர்த்தி, எல்லாம் இன்பமயம், சேவகன், நட்சத்திர நாயகன், நாடோடி தென்றல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். மேலும் அவர் அஜித் அறிமுகமான அமராவதி என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ரஜினியின் உழைப்பாளி, சரத்குமாரின் அரண்மனை காவலன், பிரபுவின் ராஜகுமாரன், கார்த்திக்கின் சீமான் உட்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

kavitha3

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடிகை கவிதா குணச்சித்திர கேரக்டர்களில் நடித்துள்ளார். சினி உலகைத் தாண்டி சின்னத்திரை உலகிலும் தனது நடிப்பின் மூலம் முத்திரையை பதித்த கவிதாவுக்கு ரசிகர்கள் கூட்டமும் ஏராளம்.

குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான கங்கா, நந்தினி, ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான என்றென்றும் புன்னகை, உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். ஒரு சில தெலுங்கு சீரியல்களிலும் நடித்த கவிதா, பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து அரசியலிலும் கால் தடம் பதித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த  2021 ஆம் ஆண்டு இந்தியாவில் உச்சத்தில் இருந்த கொரோனா தொற்று நோயால், தனது கணவர் மற்றும் மகன் ஆகிய இருவரையும் இழந்தார். இதனால் அவர் மிகப்பெரிய அளவில் சோகத்தில் இருந்த போது அவரது குடும்பத்தினர் தான் அவரை கொஞ்சம் கொஞ்சமாக தேற்றிக்கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் பிரபல நடிகை என்ற பெயரை கவிதா எடுத்திருந்தாலும் அவரது வாழ்வில் நடந்த சோகம் நிச்சயம் யாருக்கும் நடக்கக்கூடாத ஒரு துயரம் தான்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.