படக்குழுவை காட்டமாக பேசிய பத்திரிக்கையாளர்.. சரத்குமார் செய்த செயல்.. குவிந்த பாராட்டுக்கள்..!!

சரத்குமார் நடிப்பில் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி 2023 இல் வெளியான திரைப்படம் போர் தொழில். இளம் இயக்குனரான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அசோக் செல்வன், நிகிலா விமல், நிழல்கள் ரவி உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.

அதேபோன்று மறைந்த நடிகர் சரத்பாபுவும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் சரத்குமார் மூத்த காவல் அதிகாரியாக நடித்திருப்பார். இவரது உதவியாளராக அசோக் செல்வன் நடித்திருப்பார். பெண்களை தனக்கே உரிய பாணியில் கொள்ளும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பது தொடர்பாக தான் இந்த படம் அமைந்திருக்கும்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பை பை சொல்லும் கமல்ஹாசன்.. நடுவராக களம் இறங்குகிறாரா நாட்டாமை சரத்குமார்?

8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட போர் தொழில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று 50 கோடி ரூபாய் வரை வசூல் செய்து வெற்றி படமாக அமைந்துள்ளது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்த ஒரு சம்பவம் சரத்குமாருக்கு பாராட்டுக்களை குவியச் செய்துள்ளது.

பத்திரிகையாளர் சந்திப்பின்போது படக்குழுவின் காஸ்டியூம் டிசைனர் பத்திரிக்கையாளரை அவமதிக்கும் படி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் பத்திரிகையாளர் சந்திப்பு தொடங்கியவுடன் குறிப்பிட்ட பத்திரிக்கையாளர் படத்தின் இயக்குனரான விக்னேஷ் ராஜாவிடம் உங்கள் கூட இருக்கும் குழுவுக்கு தலைக்கனம் அதிகமாகி விட்டதா என்று காட்டமாக கேள்வி கேட்பார்.

இதனால் ஒன்றும் புரியாத இயக்குனர் என்ன ஆயிற்று என்று கேட்டவுடன் காஸ்ட்யூம் டிசைனரை கூப்பிடுங்கள். அவர் வந்து இங்கே அமர்ந்து கொண்டு பத்திரிக்கையாளர் கீழே உட்காருங்கள் என்று கூறுகிறார். நாங்கள் பிரஸ் என்று கூறியவுடன் அதற்கு என்ன கீழே அமருங்கள் என்று கூறுகிறார்.

விஜயகாந்த்கிட்ட இருக்குற அந்த ஒரு குணம்.. வேற எந்த நடிகருக்கும் அப்படி ஒரு மனசு வராது.. மெய்சிலிர்த்த சரத்குமார்..

நீங்கள் யார் என்று கேட்டால் நான் ஆர்டிஸ்ட் என்று கூறுகிறார். இப்படியே பத்திரிக்கையில் எழுதி விடட்டுமா என்று கேட்டால் எழுதிக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார் என்று சொன்னதோடு ஒரு படம் தானே ஹிட் ஆகியுள்ளது அதற்குள்ளாகவா தலைகீழாக குதிக்க வேண்டும் என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு என்ன சொல்வது என்று இயக்குனர் விக்னேஷ் ராஜா தவித்துக் கொண்டிருந்தார். அப்போது படத்தின் கதாநாயகனான சரத்குமார் எழுந்து சென்று பத்திரிகையாளரிடம் அவரது பெயர் மற்றும் எந்த பத்திரிக்கை என விசாரிப்பார்.

விஜயகாந்த் இல்லனா என் வாழ்க்கையே இல்லை!.. ஓபன் டாக் கொடுத்த சரத்குமார்!..

பத்திரிகையாளரும் கூறியவுடன் ஒருவர் செய்த தவறுக்கு இப்படி எல்லோர் மத்தியிலும் நீங்கள் கேட்டிருக்க வேண்டாம். உங்கள் மனது வருத்தப்பட்டதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என மன்னிப்பு கேட்டிருப்பார். இதனால் சரத்குமாருக்கு பாராட்டுக்கள் குவிந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...